Vikram – Dubbing Artist: நடிகர் விக்ரம் சினிமாவில் ஹீரோவாக ஜெயிப்பதற்கு முன் பட்ட கஷ்டங்கள் எல்லோருக்குமே தெரியும். நிறைய ஹீரோக்கள் நடிப்பை மட்டுமே குறிக்கோளாக வைத்து போராடி வருவார்கள். ஆனால் விக்ரமம் அப்படி இல்லை. சினிமாவில் ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றாவது ஒரு நாள் அது பலன் தரும் என்ற நம்பிக்கையோடு இருந்தார். ஹீரோவாக வாய்ப்புகள் தேடிக் கொண்டிருக்கும்போதே அவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றினார்.
விக்ரம் இதுவரை 22 படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி இருக்கிறார். முன்னணி ஹீரோக்கள் நிறைய பேருக்கு குரல் கொடுத்திருக்கிறார். தமிழில் ரீமேக் ஆகும் படங்களுக்கும் பின்னணி குரல் கொடுப்பவராக பணியாற்றியிருக்கிறார். அதே நேரத்தில் சின்னத்திரை சீரியல்களிலும் இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக வேலை செய்து வந்திருக்கிறார்.
நடிகர் அஜித்குமார் தமிழில் ஹீரோவாக முதன் முதலில் ரிலீஸ் ஆன படம் அமராவதி. அந்த படத்தில் அவருக்கு டப்பிங் கொடுத்தது விக்ரம். அதேபோன்று அஜித் நடித்த பாசமலர் என்ற படத்திற்கும் விக்ரம் தான் குரல் கொடுத்திருந்தார். நடிகர் வினித்திற்கு ஆரம்ப காலங்களில் புதிய முகம் போன்ற படங்களுக்கெல்லாம் டப்பிங் கொடுத்தது விக்ரம் தான்.
Also Read: பல கோடி செட்டில்மெண்ட், அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்.. துருவ நட்சத்திரத்திற்கு வச்ச ஆப்பு
ஒரே படத்தில் இரண்டு ஹீரோவுக்கு டப்பிங்
ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக ஹீரோவுக்கு குரல் கொடுப்பது என்பது சாதாரணமான விஷயமாக பார்க்கப்படலாம். ஆனால் ஒரே படத்தில் இரண்டு ஹீரோவுக்கு ஒருத்தரே டப்பிங் செய்வது என்பது ரொம்ப பெரிய விஷயம். கொஞ்சம் பிசகினாலும் அப்பட்டமாக தெரிந்து விடும். அப்படி இருக்கும் பொழுது விக்ரம் ஒரே படத்தில் இரண்டு ஹீரோவுக்கு குரல் கொடுத்து இருக்கிறார்.
1997 ஆம் ஆண்டு இயக்குனர் சபாபதி இயக்கத்தில் பிரபுதேவா மற்றும் அப்பாஸ் நடித்து வெளியான படம் தான் விஐபி. இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த படத்தில் குரு மற்றும் சந்தோஷ் என்னும் கேரக்டரில் பிரபுதேவா மற்றும் அப்பாஸ் நடித்திருந்தார்கள். இதில் இருவருக்குமே டப்பிங் செய்தது விக்ரம் தான். இரண்டு பேருமே நிறைய காட்சிகளில் ஒன்றாக பேசுவது போல் எல்லாம் அமைந்திருக்கும். ஆனால் எந்த ஒரு வித்தியாசமும் தெரியாத அளவுக்கு விக்ரம் பேசி இருக்கிறார்.
விக்ரம், பிரபு தேவாவுக்கு காதலன் மற்றும் ராசையா போன்ற படங்களில் டப்பிங் பேசி இருக்கிறார். அதேபோன்று, அப்பாஸுக்கு காதல் தேசம் மற்றும் பூச்சூடவா போன்ற படங்களில் டப்பிங் பேசி இருக்கிறார். இதனால் விஐபி படத்தில் இரண்டு ஹீரோவுக்கும் சேர்த்து டப்பிங் பேசும் வாய்ப்பு இவருக்கே கிடைத்திருக்கிறது. வந்த வாய்ப்பை அச்சு பிளறாமல் சரியாக செய்து முடித்திருக்கிறார் விக்ரம்.
Also Read: விடிய விடிய நடந்த பஞ்சாயத்து.. தள்ளிப்போன துருவ நட்சத்திரம் ரிலீஸ்