சியான் விக்ரம் என்றாலே கடின உழைப்பு தான் நமக்கு ஞாபகம் வரும், ஒவ்வொரு படத்திற்கும் தனது முழு தோற்றத்தை மாற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நுழைவதற்காக பல கஷ்டங்களை பட்டுள்ளார் அப்போது பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் முக்கியமாக அஜித்குமார் வினித் அப்பாஸ் போன்ற பிரபலங்கள் அடங்கும்
இவர் முதல் முறையாக பின்னணி குரல் கொடுத்தது அமராவதி படத்தில் அஜித் குமார். இதிலிருந்து தான் அவரின் சினிமா பயணம் தொடங்கியதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
1993இல் செல்வா இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக சங்கவி நடித்திருப்பார் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது விக்ரம் கோப்ரா, சியான் 60, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இதில் முதலாவதாக துருவ் விக்ரம் மற்றும் விக்ரம் நடித்துள்ள சியான் 60 வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சில படங்கள் ஓடாத காரணத்தினால் விக்ரம் இந்த மூன்று படங்களை மலைபோல் நம்பி உள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.