Thangalaan: விக்ரம், ரஞ்சித் கூட்டணியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தங்கலான் வரும் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் சோசியல் மீடியாவில் பட்டையை கிளப்பியது.
அதிலும் விக்ரமின் நடிப்பும் தோற்றமும் இதற்காக அவர் எடுத்த ரிஸ்க்கும் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது. அதனாலயே ரசிகர்கள் படத்தை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பட குழுவினர் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய விக்ரம் தான் கடந்து வந்த பாதை பற்றியும் தங்கலான் பற்றியும் பல விஷயங்களை கூறினார்.
தடைகளை தாண்டி சாதித்த தங்கலான்
அதில் முக்கியமானது தங்கலானுக்கும் தனக்கும் இருக்கும் ஒற்றுமை பற்றி அவர் சொன்ன விஷயம் தான். அதாவது தங்கலான் படத்தில் ஹீரோ எடுக்கும் முயற்சிக்கு பல தடைகள் வரும். ஒரு கட்டத்தில் கால் உடைந்து எதுவுமே செய்ய முடியாத நிலை வரும். ஆனாலும் அவன் போராடுவான்.
அப்படித்தான் என்னுடைய வாழ்க்கையிலும் சினிமா என்ற இலக்கை அடைய நிறைய போராடினேன். தங்கலான் படத்தில் வருவது போல் ஒரு விபத்தில் என் கால் உடைந்தது. காலையே வெட்டி எடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் சொன்னார்கள்.
ஆனால் 23 ஆபரேஷன் மூன்று வருஷம் படுக்கையில் இருந்து எப்படியோ காலை காப்பாற்றிக் கொண்டேன். அதன் பிறகும் கூட என்னால் நடக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால் என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை தான் இன்று உங்கள் முன்னால் என்னை நிற்க வைத்துள்ளது.
ஒருவேளை நான் சினிமாவில் ஜெயிக்காமல் இருந்திருந்தால் இப்போதும் கூட போராடிக் கொண்டுதான் இருப்பேன். அந்த அளவுக்கு சினிமா மீது எனக்கு ஆசை வெறி எல்லாம் இருந்தது என குறிப்பிட்டு இருந்தார். அவர் கூறிய இந்த விஷயம் ஆடியன்சை கண் கலங்க வைத்தது.
தங்கலான் மேடையில் விக்ரம் சொன்ன விஷயம்
- தங்கலான் படத்தால் 5 டாக்டர்கள் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்த மல்லு நடிகை
- கூட்டமா வராய்ங்களே, தல தப்புமா தங்கலான்.?
- சாவ துணிஞ்சவனுக்கு மட்டும் தான் இந்த வாழ்க்கை