வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கமலஹாசனே வியந்து பார்த்த விக்ரம் பட நடிகர்.. பேட்டியில் சிலிர்த்துப் போய் சொன்ன சம்பத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் விக்ரம் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை வெளியான கமலின் படங்களில் விக்ரம் படம் அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது. வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

விக்ரம் படம் வெளியாகி சில வாரங்களிலேயே கிட்டத்தட்ட 300 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு போதைபொருள் கடத்தல்காரராக அனைவரையும் மிரள செய்திருந்தார். இவருக்கு மனைவியாக சிவானி, மைனா நந்தினி, மகாலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் விக்ரம் படத்தில் உலகநாயகனே ஒருவரின் நடிப்பை பார்த்து மிரண்டு போனதாக பிரபல வில்லன் நடிகர் சம்பத் ஒரு ஊடகத்தில் கூறியுள்ளார்.

அதாவது பகத் பாசிலின் நடிப்பை பார்த்து தான் கமலஹாசன் வியந்து உள்ளாராம். பகத் பாசில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக நடிக்கக் கூடியவர். சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கதாநாயகனாக பிரபலமான நடிகர்கள் வில்லனாக நடிக்க யோசிப்பார்கள். ஆனால் விஜய் சேதுபதி போல ஃபகத் பாசிலும் வில்லன் கதாபாத்திரங்களை துணிச்சலாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் விக்ரம் படத்தில் பகத் பாசிலின் கண்களே நடிக்கிறது என கமலஹாசன் புகழ்ந்து தள்ளியுள்ளார். உலகநாயகன் இடம் இருந்த இவ்வாறு பகத் பாசில் பாராட்டை பெற்றிருப்பது மிகப் பெரிய விஷயமாகும். மேலும் தொடர்ந்து பகத் பாசில் இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Trending News