வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மிஸ் இந்தியாவை காதலிக்கும் விக்ரம் பட பிரபஞ்சன்.. காதலர் தினத்தில் கொடுத்த சர்ப்ரைஸ்

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் உலக அளவில் பட்டையைக் கிளப்பியது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டனர்.

அதிலும் விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் மகனாக உதவி காவல் ஆய்வாளரான பிரபஞ்சன் என்ற கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பு பலராலும் பராட்டப்பட்டது. மலையாள நடிகர் ஜெயம்ராம் அவர்களின் மகனாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த காளிதாஸ் இளம் ஹீரோவாக கடந்த சில வருடங்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Also Read: வளரத் துடிக்க போராடும் 5 இளம் நடிகர்கள்.. அப்படி முத்திரை குத்தப்பட்ட அசோக் செல்வன்

இவர் தற்போது காதலர் தினத்தில் மிஸ் இந்தியாவை காதலிப்பதாகவும் இருவரும் நீண்ட நாட்களா காதலித்து வருவதாக உறுதி செய்து இருக்கிறார். மேலும் காளிதாஸ் ஜெயராம் சிங்கிள் இல்லை என்றும் காதலி தாரினி உடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

காளிதாஸ் ஜெயராமின் காதலி தாரினி மாடலிங் செய்து வருகிறார். இவர் 2021 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் மூன்றாம் ரன்னர் அப் ஆனது குறிப்பிடத்தக்கது. பல நாட்களாகவே காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரினி இருவரும் இணைந்து சுற்றி வரும் புகைப்படம் சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருந்தது.

Also Read: ஏஜென்ட் அமருக்கு போட்டியாக வளரும் 2 வாரிசு நடிகர்கள்.. எல்லா படங்களிலும் மிரளவிடும் நடிப்பு

மேலும் ஜெயராம் குடும்பத்தினருடன் கூட தாரினி சேர்ந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவின் காளிதாஸ் ஜெயராமிடம் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் கடைசியில் இந்த வருட காதலர் தினத்தில் தன்னுடைய வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘நான் சிங்கிள் இல்லை’ என்று குறிப்பிட்டு காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் பிறகு இந்த காதல் ஜோடிக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தற்போது காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் ‘பக்கத்துல கொஞ்சம் காதல்’ என்கின்ற படம் தயாராகி வருகிறது.

காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காளிதாஸ் ஜெயராம்

kalidas-jayaram-cinemapettai
kalidas-jayaram-cinemapettai

Also Read: 2022ல் ஒடிடியை மிரட்டிய 8 வெப் தொடர்கள்.. வீரவிளையாட்டை விட்டு கொடுக்காமல் வெளிவந்த ‘பேட்டை காளி’

Trending News