ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பா ரஞ்சித்தின் அடுத்த ஹீரோ, வில்லன் இவங்க தான்.. தங்கலான் மேடையில் சீயான் கொடுத்த அசத்தலான அப்டேட்

Thangalaan – Pa. Ranjith: சோசியல் மீடியாவில் தங்கலான் ஃபீவர் ஆரம்பித்துவிட்டது. அடுத்த வாரம் ரசிகர்களின் பார்வைக்கு வரும் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பும் ஆவலும் அனைவர் மத்தியிலும் இருக்கிறது. அதை அதிகரிக்கும் வகையில் பட குழுவும் பிரமோஷனில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழா பற்றிய பேச்சும் ஒரு பக்கம் வைரல் ஆகி வருகிறது. அதில் விக்ரம் தங்கலான் பற்றி பல சுவாரசியமான விஷயங்களை மேடையில் கூறியிருந்தார்.

அதேபோல் பா ரஞ்சித்துடன் பணியாற்றிய அனுபவம் ரொம்பவும் பிடித்திருந்தது. அடுத்த படத்திலும் இணைய ஆசைப்படுவதாக தெரிவித்தார். ஆனால் பா ரஞ்சித்துக்கு அடுத்தடுத்து நிறைய ப்ராஜெக்ட் இருக்கிறது என ஒரு அப்டேட்டையும் போற போக்கில் சொன்னார்.

ஆர்யாவை வில்லனாக்கிய பா ரஞ்சித்

அந்த வகையில் பா ரஞ்சித் அட்டகத்தி தினேஷை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி தயாரிக்க இருக்கிறார். அதில் ஆர்யா தான் வில்லன் என்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சி தான். கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் ஆர்யாவின் பங்கு மிக முக்கியமானது.

அதனாலேயே வில்லன் ரோலுக்கு அவர் சம்மதித்திருக்கிறார். ஏற்கனவே இது குறித்து செய்திகள் கசிந்தது. ஆனால் விக்ரம் தங்கலான் மேடையில் பா ரஞ்சித்தின் அடுத்த ஹீரோ தினேஷ் என கூறி அதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து இருக்கிறார்.

மேலும் இப்படம் மிகவும் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட இருக்கிறது. அதை அடுத்து பா ரஞ்சித் டாப் ஹீரோ ஒருவரின் படத்தை இயக்க இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முடிந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் தங்கலான் ரிலீசுக்கு பிறகு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ

Trending News