புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கொக்கி குமாருக்கு, விக்ரம் கொடுக்கும் அடி.. குடும்ப சண்டை ஆரம்பித்த இனியா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற இனியா சீரியல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. அதிலும் இந்த நாடகத்தை பார்ப்பதே இனியா விக்ரமிற்காக தான் என்று சொல்லும் அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ் இருக்கிறது. இதில் இனியா தன்னுடைய அக்காவின் வாழ்க்கை அம்மா ஆசைப்பட்ட மாதிரி எல்லாமே நடக்க வேண்டும் என்று அக்காவிற்கு எப்பொழுதும் சப்போர்ட்டாக இருக்கிறார்.

ஆனால் இவர்களை சேர விடக்கூடாது என்று விக்ரமின் அத்தைகள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தில் இருந்து இனியா அதை தடுத்து நிறுத்தி வருகிறார். இவங்க குடும்பத்தில் நடக்கும் பிரச்சினையே சமாளிப்பதே இனியாவுடைய முக்கிய வேலையாக இருக்கிறது. அத்துடன் விக்ரமின் அப்பா கொடுக்கும் டார்ச்சரை சமாளித்து அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

Also read: ஐஸ்வர்யாவின் ஆடம்பரத்தால் நெற்கதியாக நிற்கும் கண்ணன்.. பகடைக்கையாக மாட்டிக்கொண்ட கதிர்

அடுத்ததாக இனியா வீட்டில் இப்படியே அவருடைய வாழ்க்கையை முடிந்து விடக்கூடாது என்பதற்காக அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு போக வேண்டும் என்று வேலைக்கு போக நினைக்கிறார். இதற்கு விக்கிரமும் சம்மதம் தெரிவித்ததால் இனியா வேலைக்கு கிளம்புகிறார். அப்பொழுது விக்ரமை ரொமான்ஸ் ஆக மாமா நான் போயிட்டு வருகிறேன் என்று சொல்கிறார்.

இதைக் கேட்ட விக்ரமின் அப்பா எங்கே போகிறாய் என்று கேட்க அதற்கு இனியாவின் மாமியார் வேலைக்கு போகப் போறா என்று சொல்கிறார். இதை கேட்டு அவர் அதெல்லாம் நீ எங்கேயும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. வீட்டில் சமைக்கிறதும் துவைக்கிறதும் தான் உன்னோட வேலை வெளில எல்லாம் போய் சம்பாதிக்கலாம் தேவை இல்லை எங்களுக்கு அந்தப் பணம் வேண்டாம் என்று சொல்லி இனியாவை தடுக்கிறார்.

Also read: குணசேகரன் வாங்கும் மரண அடி.. ஒட்டு மொத்த குடும்பமும் வைக்கும் ஆப்பு

ஆனால் இனியா ஒன்றும் இதெல்லாம் கேட்டு அடங்கி போறவ கிடையாது. நியாயம் என்று பட்டால் அதை யார் தடுத்தாலும் செஞ்சு தான் முடிப்பார். அப்படி இருக்கையில் விக்ரமே சம்மதம் தெரிவித்த பிறகு மாமனார் சொல்வதை கேட்டு எல்லாம் அமைதியாக போக மாட்டார். இதை வைத்து மறுபடியும் குடும்பத்தில் ஒரு பஞ்சாயத்து ஆரம்பிக்கப் போகிறது.

ஆனாலும் வழக்கம் போல் இனியா விஷயத்தில் விக்ரம் சப்போர்ட் பண்ணுவார். அடுத்ததாக விக்ரம் அந்த கொக்கி குமார் என்னவெல்லாம் பண்றான். இனியாவிற்கு எதிராக சதி தீட்டுகிறானா என்று கண்டுபிடிக்க போகிறார். விக்ரம் இருக்க இனியாவுக்கு என்ன பயம். கொக்கி குமாருக்கு விக்ரம் கொடுக்கும் ஒவ்வொரு அடியும் மரண அடியாக இருக்கப் போகிறது.

Also read: கோபிக்கு இந்த அவமானம் தேவையா?. பாக்யாவிற்காக மகன்கள் கொடுத்த அடி

Trending News