நீண்ட காலமாக தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும் விக்ரம் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் கோப்ரா. ஏழு கெட்டப்புகளில் நடித்துள்ள விக்ரமின் கோப்ரா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் திடீரென படப்பிடிப்பை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் நீண்ட நாள் கிடப்பில் கிடப்பில் போடப்பட்டது கோப்ரா திரைப்படம்.
ரஷ்யாவில் முக்கியமான பகுதியை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் கோப்ரா படம் சிக்கியதால் இவ்வளவு நாட்களில் இழுத்தடித்து விட்டது. இந்நிலையில் மீண்டும் ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்தலாம் என அந்நாட்டு அரசு அனுமதி வழங்கிய நிலையில் உடனடியாக படக்குழுவினர் ரஷ்யாவுக்கு சென்றுவிட்டனர்.
அங்கிருந்து விக்ரம் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் பரட்டைத் தலையுடன் கையில் கிட்டார் பேக்கை எடுத்துக்கொண்டு செல்வதுபோல் ஸ்டைலிஷாக உள்ளது அந்த புகைப்படம்.
இதனை விக்ரமின் ரஷ்ய ரசிகர் ஒருவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை விக்ரம் ரசிகர்கள் தாறுமாறாக இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ரஷ்யாவில் கோப்ரா படத்தில் நடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். விரைவில் கோப்ரா படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைய உள்ள நிலையில் மே மாதம் கோப்ரா படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.