செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

கேஜிஎஃப் 2 படத்தை ஓரம்கட்டும் விக்ரம்.. பல கோடிகளைக் கொட்டிக் குவிக்கும் வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் விக்ரம் படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம் படம் முதல் நாளைவிட வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை படங்கள் வெளியாகி அனைத்துமே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூல் பொருத்தவரை இந்த எல்லா படங்களுமே நல்ல லாபத்தை அடைந்தது. இந்நிலையில் ரசிகர்கள் ஒரு நல்ல படத்திற்காக காத்திருந்தனர்.

அது அனைத்தையும் பூர்த்தி செய்தது விக்ரம் படம் தான். மேலும் மற்ற மொழி படங்களான ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் 2 போன்ற படங்கள் தமிழில் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் கேஜிஎப் 2 தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 105 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூலை இன்னும் சில நாட்களில் விக்ரம் படம் முறியடிக்க உள்ளது.

அதாவது விக்ரம் படம் வெளியாகி முதல் நாள் கிட்டத்தட்ட 30 கோடி வசூல் செய்தது. ஆனால் இப்படத்தின் ப்ரோமோஷன் மிகப்பிரம்மாண்டமாக செய்தும் இவ்வளவு குறைந்த வசூல் வந்ததால் படக்குழு கொஞ்சம் அதிருப்தியில் இருந்தது. ஆனால் படம் வெளியாகி இரண்டாவது நாளில் உலக அளவில் 100 கோடி வசூல் செய்தது.

மேலும் மூன்றாவது நாளான ஞாயிற்றுக் கிழமை 150 கோடி உலகம் முழுவதும், 100 கோடி இந்திய அளவிலும் வசூலை கடந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் மூன்றே நாளில் விக்ரம் படம் 60 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் சில நாட்களிலேயே 100 கோடி வசூல் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கேஜிஎஃப் 2 படம் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், விக்ரம் படம் வெளியாகி சில நாட்களிலேயே 100 கோடி வசூலை கடக்க உள்ளதால் கே ஜி எஃப் 2 படத்தின் தமிழ்நாட்டு வசூலை மிகக் குறுகிய காலத்திலேயே விக்ரம் படம் முறியடிக்க உள்ளது.

- Advertisement -spot_img

Trending News