சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பதா?. முடியவே முடியாது என ஒத்த காலில் நிற்கும் விக்ரம்

விக்ரம் கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வி படங்களையே கொடுத்து வந்ததால் அவரது மார்க்கெட் டல் அடித்து விட்டது. அதன் பிறகு மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தால் இப்போது ஒரு நிலையான இடத்தில் விக்ரம் இருக்கிறார். ஆனால் தனியாக ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.

அதனால் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் கடுமையாக உழைத்து வருகிறார். பகல், இரவு, உணவு, உறக்கம் என்று எதுவுமே பார்க்காமல் இப்படத்திற்காக விக்ரம் ஓடிக்கொண்டிருக்கிறார். மேலும் படத்தில் டூப் போடாமல் உடலை வருத்தி கஷ்டமான காட்சிகளையும் நடித்து வருகிறாராம்.

Also Read : இளவட்ட வயசில் துருவ் செய்யும் மட்டமான வேலை.. உச்சகட்ட கவலையில் இருக்கும் விக்ரம்

இதற்குப் பின்னால் தங்கலான் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற ஒன்றிற்கு மட்டுமல்லாமல் வேறு ஒரு காரணமும் இருக்கிறதாம். அதாவது தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப போகிறார்களாம். ஆஸ்கர் வாங்குவதற்கான எல்லா தகுதியும் இந்த படத்திற்கு இருக்கிறதாம்.

சினிமாவில் இத்தனை வருடங்களாக கடின உழைப்பை போட்டு உழைத்து வரும் விக்ரமுக்கு தங்கலான் படம் மூலம் அங்கீகாரம் கிடைத்தால் மிகப்பெரிய கௌரவம் தான். இப்படி வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதா என விக்ரம் ஒரு விஷயத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

Also Read : கமலை போல் மாறத் துடிக்கும் ரஜினி.. விக்ரம் படத்தால் இப்படி ஒரு மாற்றமா?

அதாவது லைக்கா தயாரிப்பில் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக விக்ரம் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் லைக்காவும் விக்ரமிடம் பேசி இருக்கிறது.

ஆனால் தங்கலான் படத்தின் மூலம் மிகப்பெரிய பெயர் வரும் என்ற நம்பிக்கையில் உள்ள விக்ரம் இப்போது போய் வில்லனாக நடிக்க விரும்பவில்லையாம். மேலும் லைக்கா ஒரே செக்கில் 50 கோடி தருவதாக சொல்லியும் விக்ரம் மறுத்து விட்டாராம். அந்த அளவுக்கு தங்கலான் படத்தின் மீது விக்ரம் முழு நம்பிக்கை வைத்துள்ளார்.

Also Read : ரெட் ஜெயண்ட்டை மாட்டிவிட்ட லைக்கா.. இந்தியன் 2-வில் இருந்து தப்பிக்க சுபாஸ்கரன் எடுத்த முடிவு

Trending News