வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சேது படத்தில் முதல் சாய்ஸ் விக்ரம் இல்லையாம்.. பாலாவை டீலில் விட்ட நடிகர்

பாலா இயக்குனராக அறிமுகமான சேது படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சீயான் விக்ரம் என்று இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். சேது படத்திற்கு பிறகு தான் பாலா மற்றும் விக்ரம் இருவருக்குமே பட வாய்ப்புகள் அதிகம் வர தொடங்கியது. இப்போது வரை இந்த படம் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேது படத்தில் முதல் பாதியிலும் சரி, கிளைமாக்ஸ் காட்சியிலும் சரி அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் இந்த படத்தில் முதலில் விக்ரம் தேர்வாகவில்லையாம். வேறு ஒரு நடிகருக்கு வந்த வாய்ப்பு சில காரணங்களினால் தட்டி போக அதன் பிறகு தான் விக்ரம் நடித்து பாராட்டை பெற்றுள்ளார்.

Also Read : இறுதி சடங்கை செய்ய விடாமல் கொடுமைப்படுத்திய பாலா.. வெறுத்து போய் சாபம் கொடுத்த தயாரிப்பாளர்

அதாவது முதலில் நடிகர் முரளியிடம் பாலா சேது கதையை கூறியுள்ளார். இந்த கதை முரளிக்கு பிடித்து போக கண்டிப்பாக பண்ணுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் ஒரு பிசியான நடிகராக முரளி நடித்துக் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி இது பாலாவுக்கு அறிமுகப்படம்.

ஆகையால் முரளி இந்த படத்தை நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டு இருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த பாலா விக்ரமை வைத்து படம் எடுக்கலாம் என்று முடிவு செய்து சேது படத்தை தொடங்கினார். அதேபோல் படம் வேற லெவலில் ஹிட் ஆனது.

Also Read : பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி தயாரிப்பாளர்களை துண்டை போட வைத்த 5 படங்கள்.. விக்ரம் கொடுத்த படு மொக்கை

அதன் பிறகு இந்த படத்தில் நடிப்பதை தவற விட்டு விட்டோமே என்று முரளியும் வருந்தியது உண்டாம். விக்ரமின் தற்போதைய அபரிவிதமான வளர்ச்சிக்கு அடிதளம் போட்டது சேது படம் என்று சொன்னால் மிகையாகாது. இந்த படத்தின் மூலம் தான் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து விக்ரம் நடித்து வருகிறார்.

இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : பாரதிராஜா, பாலா போட்டி போட்ட கதை.. மொக்க கூட்டணியில் சசிகுமாருக்கு வைக்கப்போகும் ஆப்பு

Trending News