வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஏஆர் ரஹ்மானால் வருத்தத்தில் இருக்கும் விக்ரம்.. நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டாங்க!

கமல்ஹாசனைப் போல நடிகர் விக்ரமும் சினிமாவிற்காக பல அர்ப்பணிப்புகள் செய்துள்ளார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்காக மெனக்கெட்டு செய்யக்கூடியவர். ஆனால் சமீபகாலமாக விக்ரம் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இதனால் தற்போது விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படம் உருவாகியுள்ளது. அதிலும் கோப்ரா படத்தில் பத்திற்கும் மேற்பட்ட கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ளதால் இப்படத்தை மலைபோல் நம்பி உள்ளார். சமீபத்தில் கோப்ரா படம் ஆகஸ்ட் 11 வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணம் கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தான் என்று கூறி வந்த நிலையில் தற்போது ஏ ஆர் ரகுமான் தான் காரணம் என கூறுகின்றனர். அதாவது விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா இரண்டு படங்களையுமே ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

மணிரத்தினத்திற்கும் ஏஆர் ரஹ்மானுக்கும் பல வருட கால நட்பு இருப்பதால் பொன்னியின் செல்வன் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து குறித்த நேரத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து கொடுத்துள்ளார். மேலும் கோப்ரா படத்தில் இசைக்கு முக்கிய பங்கு உள்ளதாம்.

இதனால் இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் நேரம் எடுத்த இசையமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விக்ரம் கோப்ரா படத்தை கூடிய விரைவில் திரையரங்கில் வெளியிட்டு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த இருந்தார் விக்ரம்.

ஆனால் ரகுமானால் கோப்ரா படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதால் விக்ரம் அவர் மீது வருத்தத்தில் இருப்பதாகக் கூறி வருகின்றனர். இப்படி நம்ப வச்சு கழுத்து அறுத்துட்டாங்க என்ற ரேஞ்சுக்கு பீல் பண்ணி கொண்டிருக்கிறாராம் விக்ரம். இதனால் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாவதே சந்தேகம்தான் எனக் கூறி வருகின்றனர்.

Trending News