திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அடுத்தடுத்து வெளிவர உள்ள விக்ரமின் 5 படங்கள்.. உயிரைக் கொடுத்து போராடும் சியான்

சீயான் விக்ரம் அவ்வளவு எளிதாக சினிமாவிற்குள் நுழையவில்லை. ஆரம்பக் கட்டத்தில் இவர் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் தாண்டி ஒரு மாஸ் ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இதற்குக் காரணமாக இருந்தது இவருடைய விடாமுயற்சி. மற்றும் கதைக்கேற்ற மாதிரி இவரின் உடல் தோற்றத்தையும் மாற்றிக் கொண்டு நடிப்பதில் மிகவும் திறமையானவர்.

மேலும் பொதுவாக இவர் எப்படிப்பட்ட கதைகளை தேர்ந்தெடுப்பவர் என்றால் இவர் நடிக்கும் படம் வெளியானால் அதிக லாபத்தை கொடுக்கும்.  அந்த அளவுக்கு கதையை தேர்ந்தெடுப்பார். இதனால் தான் இவரது படங்கள் மிகப்பெரிய ஹிட் படங்களாக ஆனது. இதை அப்படியே தக்கவைத்துக் கொள்வதற்காக  வருகிற படங்களில் உயிரைக் கொடுத்து நடித்து போராடி வருகிறார்.

Also read: அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த தங்கலான் பட நடிகை.. ரசிச்சு ருசிச்சு போட்டோ எடுத்தது நம்ம சியானா!

இப்பொழுது இவர் கையில் இந்த வருடம் ரிலீஸ் ஆவதற்கு ஐந்து படங்களை வைத்திருக்கிறார். அதாவது கடந்த வருடம் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் வெற்றியை கொடுத்தார். அதே மாதிரி இந்த வருடமும் பொன்னியின் செல்வன் பாகம் 2வில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

அதற்கு அடுத்து இவர் கமிட்டாகி உள்ள படம் தங்கலான். இதில் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகன், பசுபதி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்குகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தை கூடிய விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

Also read: ஒரு பட வாய்ப்பிற்காக போராடும் துருவ் விக்ரம்.. கால் கடுக்க நின்று அப்பாவைப் போல அவஸ்தைப்படும் மகன்

அடுத்ததாக கரிகாலன் படம். இப்படத்தை ஆரம்பித்து நீண்ட வருடங்களாகவே கிடப்பில் கிடந்தது. இப்பொழுது இப்படத்திற்கான வேலைகளை மறுபடியும் ஆரம்பித்து வெளியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் கதையானது சங்ககாலத்தில் சோழர்களின் பிரபலமான தமிழ் மன்னர்களில் ஒருவரான கரிகாலன் சோழனின் வரலாற்று பாத்திரத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தை எல்ஐ கண்ணன் இயக்குகிறார்.

இதனை அடுத்து கருடா என்ற படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்தை இயக்குனர் திரு என்பவர் இயக்க இருக்கிறார். இவர் தீராத விளையாட்டுப் பிள்ளை, நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியவர்.  இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது.  இப்படி தொடர்ந்து ஐந்து படங்களில் நடித்து ஒரு பெரிய வெற்றி நாயகனாக வரவேண்டும் என்று போராடி வருகிறார்.

Also read: படமே ஓடாத விக்ரமுக்கு இவ்வளவு சம்பளமா.. ஹிட் ஹீரோக்கள் கூட வாயை பிளக்கும் சம்பளம்

Trending News