வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபரீதம்.. விழி பிதுங்கி நிற்கும் கமல்!

தமிழ் சினிமாவிற்கு உலக நாயகனாக கருதப்படும் கமலஹாசன் நடிக்கும் அடுத்த படம் விக்ரம். இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்து லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்ட தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட போது, ஸ்டண்ட் மாஸ்டர் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் விக்ரம் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கமலஹாசனுடன் பகத் பசில், விஜய் சேதுபதி, ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் ,நரேன், மைனா நந்தினி, மகேஸ்வரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் விக்ரம் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

எனவே மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தை குறித்த ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த நிலையில் படப்பிடிப்புத் தளத்தில்கொரோனா தோற்று பரவியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகையால் விக்ரம் படம் விரைவில் நிறைவடைந்து திரையிடக் காத்திருக்கும் நிலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் படக்குழுவினர் மாட்டிக் கொண்டுள்ளனர். அத்துடன் கமலஹாசன் கடந்த 1986ஆம் ஆண்டு ஏற்கனவே விக்ரம் என்ற தலைப்பில் ராஜசேகர் இயக்கத்தில் சத்யராஜ், அம்பிகா உள்ளிட்டோருடன் நடித்த அசத்தினார்.

ஆனால் அந்தப்படம் குமுதம் வார இதழில் வெளிய வந்த தொடர் கதையை வைத்து படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகையால் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் அதிரடி ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending News