புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லீக்கான விக்ரம் படத்தின் கதை.. விஜய் சேதுபதிக்கும் பகத் பாசிலுக்கும் உள்ள கனெக்சன்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3ம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தின் பஸ்ட் சிங்கிள் பாடல், ட்ரைலர் உள்ளிட்ட அனைத்தும் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் தற்போது டிரைலர் காட்சிகளை பார்த்து விட்டு படத்தை காணும் ஆவலில் இருக்கின்றனர். இப்போதே இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பதை பார்த்த படக்குழுவினர் படத்தை இன்னும் அதிக அளவில் பிரமோஷன் செய்யும் பணிகளில் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தின் கதை என்ன என்பது பற்றிய ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் கொடூர வில்லனாக நடித்து இருக்கின்றனர் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது.

அதன்படி அவர்கள் இருவரும் இந்த படத்தில் உடன் பிறந்த சகோதரர்களாக நடித்துள்ளனர். அதில் விஜய் சேதுபதி ஒரு கேங்ஸ்டர் கேரக்டரிலும், பகத் பாசில் அரசியல்வாதியாகவும் நடித்துள்ளார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து உயர்பதவியில் இருக்கும் அரசு அதிகாரி நரேனை கடத்துகிறார்கள்.

அப்படி கடத்திச் செல்லும் அவரை கோட்டை போன்ற ஒரு இடத்தில் சிறை வைக்கின்றனர். அவரை காப்பாற்றுவதற்காக ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான கமல் களம் இறங்குகிறார். அதன் பிறகு நரேன் காப்பாற்றப்பட்டாரா, கமலின் ருத்ரதாண்டவம் என்ன என்பதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இதில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ஆனால் அவர்களை தூக்கி சாப்பிடும் விதமாக கமல் இந்த வயதிலும் பல ஆக்ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆண்டவரின் அந்த ஆக்ஷன் காட்சிகளை காண்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.

Trending News