சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

5 நாளில் 100 கோடிக்கு பிளான் போட்ட விக்ரம்.. சீயானுக்கு இடியாய் விழுந்த அடி

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பொதுவாக வெள்ளிக்கிழமை படங்கள் வெளியிடுவது ரொம்ப காலமாக நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை என்றால் நல்ல நாள் என்ற அடிப்படையிலும் சரி அடுத்து தொடர் மூன்று நாட்கள் விடுமுறை இருப்பதால் வசூல் ரீதியாக வெற்றி பெறும் என்பதில் ஒரு விஷயம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தி.

ஒரு சில நடிகர்கள் அதை மாற்றுவார்கள் அதில் அஜித் வியாழக்கிழமை வெளியிடுவதை ஒரு சில வருடங்களாக வழக்கமாக கொண்டுள்ளார். அதனையும் சில படங்கள் பின்பற்றி வந்தனர். சில படங்களுக்கு நான்கு நாள் ஐந்து நாள் தொடர் விடுமுறை நாட்களில் படத்தை வெளியிட்டு மிகப்பெரிய வசூலை பெற்று விடுவார்கள்.

Also read: விக்ரம் செய்த அநியாயம்.. கூட்ட நெரிசலில் சிக்கி போலீசிடம் தடி அடி வாங்கிய விசுவாசிகள்

விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் பல வருடங்கள் காத்திருப்புக்குப் பிறகு கஷ்டப்பட்டு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் இது புதன்கிழமை இவர்கள் போட்ட கணக்கு படி புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று ஐந்து நாட்கள் படத்தின் மொத்த வசூல் எடுத்து விடலாம் என்று கணக்குப் போட்டு வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால் படம் பிரமாண்ட முறையில் தயாரித்ததும் அதில் விக்ரம் நடித்து இருப்பதும் காரணமாக மட்டும் வைத்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் படம் மக்கள் எதிர்பார்த்த விதத்தில் அமையவில்லை. பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் பல கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் படத்தின் வசூல் மேலும் பாதிக்கக்கூடும் காரணம் அடுத்தடுத்து வேலை நாட்கள் இதில் படத்தின் விமர்சனங்களையும், கருத்துக்களையும் கேட்டுவிட்டு மக்கள் போகாமல் இருப்பார்கள். சனி,ஞாயிறு மட்டுமே மக்கள் செல்வார்கள்.

Also read: ஏஆர் ரஹ்மானால் வருத்தத்தில் இருக்கும் விக்ரம்.. நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டாங்க!

படக்குழு வசூலை நம்பி இப்படி ஒரு கணக்கைப் போட்டு வெளியிட்டு இருக்கிறார்கள் ஆனால் படம் சுமாராக இருப்பதால் மேலும் இந்த வசூலை பாதிக்கக்கூடும். இவர்கள் எப்போதும் போல் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்தால் தொடர்ந்து மூன்று நாள் வசூல் வந்திருக்கும். படக்குழு செய்த வேலை விக்ரமிற்கு எதிராகவே அமைந்துள்ளது.

சினிமாவைப் பொருத்தவரை பிரம்மாண்டம், பெரிய நடிகர்கள் இருந்தால் மட்டுமே படத்தை வெற்றி பெறச் செய்து வைத்துவிட முடியாது என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு இனிமேல் வரும் திரைப்படங்கள் நல்ல அம்சத்துடன் வந்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் நிலைத்திருக்க முடியும் என்பது உறுதியாகிறது.

Also read: பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத விக்ரம்.. நீங்க சொல்ற சாக்கு ஏதும் நம்புற மாதிரி இல்ல

- Advertisement -spot_img

Trending News