செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சாமுராய், படத்துக்கு பின் விக்ரமுக்கு ஏற்பட்ட பிரச்சனை .. கேரியர் பெஸ்ட் க்கு ஆசைப்பட்டு மண்ணாய் போன தங்கலான்

நடிகர் சீயான் விக்ரம் தமிழ் சினிமாவின் கடின உழைப்பாளிக்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு படத்திற்காக எந்த அளவுக்கு கூட அவர் ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பார். இதனால் தான் இவருடைய வெற்றி படங்களை மட்டும் ரசிகர்கள் கணக்கில் கொள்ளாமல், அத்தனை படங்களையும் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் ஒவ்வொரு படத்திற்கும் விக்ரம் அவ்வளவு உழைப்பை கொடுக்கிறார்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த ஆதித்த கரிகாலன் கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நாவலை பொருத்தவரைக்கும் வந்திய தேவன் கேரக்டர் தான் பெரிதாக அனைவராலும் ஈர்க்கப்படும். ஆனால் இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் ஆக நடித்த விக்ரம் அத்தனை பேரையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவர் அந்த கேரக்டராகவே வாழ்ந்து ஜெயித்து விட்டார்.

Also Read:திடீரென நிறுத்தப்பட்ட தங்கலான் படப்பிடிப்பு.. என்னதான் ஆச்சு மருத்துவமனையில் விக்ரம்

விக்ரம் நல்ல நடிப்பை கொடுக்கும் அளவிற்கு அதற்காக அதிகமான ரிஸ்குகளையும் எடுக்கிறார். ஒரே படத்தில் உடல் அமைப்பு மற்றும் முகபாவத்தில் பல வித்தியாசங்களை காட்டக் கூடியவர் தான் விக்ரம். ஐ திரைப்படத்தில் கிளைமாக்ஸ் முன் வரும் காட்சிகளுக்காக இவர் உடல் எடையை குறைத்தது எல்லாம் பெரிதாக கொண்டாடப்பட்டாலும், அது முழுக்க முழுக்க ஆரோக்கியத்துக்கு கேடானது என்று விவாதமும் நடந்தது.

அதே போன்ற ஒரு ரிஸ்கை தற்போது தங்கலான் திரைப்படத்திற்காக எடுத்து விபத்தில் சிக்கி இருக்கிறார் சீயான் விக்ரம். இதில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் தவறு என்று எதுவுமே கிடையாது. குறிப்பிட்ட காட்சியில் நடிப்பதற்காக இரண்டு டூப்புகளை ரஞ்சித் ரெடி பண்ணி வைத்திருந்தும் நானே அந்த காட்சிகளின் நடிக்கிறேன் என்று அடம் பிடித்து நடித்த விக்ரம் விபத்துக்குள்ளாகி இருக்கிறார்.

Also Read:வெளிவந்தது தங்கலான் படத்தின் உண்மை கதை.. பல ரகசியம் அடங்கிய டைட்டிலை வைத்த பா ரஞ்சித்

விக்ரமின் கால்களில் முள் மற்றும் ஆணி குத்தியதோடு அவருடைய விலா எலும்பும் உடைந்து விட்டது. இதனால் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த தங்கலான் படப்பிடிப்பு அப்படியே நின்று விட்டது. இதே போன்று தான் சாமுராய் திரைப்படத்தின் போது டூப் இல்லாமல் விக்ரம் நடித்த காட்சியில் அவருக்கு விபத்து ஏற்பட்டு இடுப்பு எலும்பு உடைந்தது.

தங்கலான் திரைப்படத்தை தன்னுடைய கனவு படமாக நினைத்து அதை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று திட்டம் போட்ட விக்கிரமுக்கு இது மிகப்பெரிய அடியாராக அமைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும் ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டும் என்று நினைத்து இவர் செய்யும் இதுபோன்ற வேலைகள் அவருடைய ரசிகர்களையும் கவலைக்குள்ளாக்குகிறது.

Also Read:தங்கலான் பார்த்து மிரண்டு போன கமல்.. சூர்யாவை தூக்கிவிட்டு விக்ரமை போட்டு உருவாக்கும் வரலாற்று படம்

Trending News