புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நடிச்ச 16 படத்துல 3 படம் தான் ஓடுச்சு.. அடிமாட்டு விலைக்கு தள்ளப்பட்ட சிவாஜி வாரிசு விக்ரம் பிரபு

நடித்தால் இப்படித்தான் நடிக்கவேண்டும் என அனைவருக்கும் எடுத்துக் காட்டியவர் தான் சிவாஜி கணேசன். அவரது வாரிசாக இளைய திலகம் பிரபு ஓரளவுக்கு தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

விக்ரம் பிரபு ஆரம்பத்தில் ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தவர். விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான இவன் வேற மாதிரி, அரிமா நம்பி போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு விக்ரம் பிரபு நடித்த 13 படங்கள் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. சமீபகாலமாக படுமோசமாக இருக்கிறது அவரது படங்களின் கதை தேர்வுகள். ஆரம்பத்தில் நல்ல நல்ல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த விக்ரம் பிரபுவா இது என அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அமைகிறது அவரது படங்கள்.

விக்ரம் பிரபுவும் எப்படியாவது முட்டிமோதி ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து விடலாம் என போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கான சரியான நேரம் இன்னும் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் அடுத்தடுத்து விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன், பாயும் ஒளி நீ எனக்கு மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களையே பெரிதும் நம்பியுள்ளார்.

vikram-prabhu-cinemapettai-01
vikram-prabhu-cinemapettai-01

ஒரு கட்டத்தில் 70 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த விக்ரம் பிரபு சமீபகாலமாக 30 லட்சம் வாங்கும் அளவுக்கு இறங்கிவிட்டாராம். இதனால் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்து சம்பளத்தை உயர்த்தி விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம் விக்ரம் பிரபு.

இதனால் மணிரத்னம் படத்தை பெரிதும் நம்பியுள்ளாராம். பொன்னியின் செல்வன் படத்தில் மிகச் சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் கண்டிப்பாக தனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும் என நம்பி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் விக்ரம் பிரபு.

சிகரம் தொடு, வெள்ளக்கார துரை, இது என்ன மாயம், வாகா, வீர சிவாஜி, சத்ரியன், நெருப்புடா, பக்கா, 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை, வானம் கொட்டட்டும், அசுரகுரு போன்ற படங்கள் வசூல் ரீதியாக படு மோசமான தோல்வியை சந்தித்தது. ஒருவேளை சன் டிவியில் ஒளிபரப்பான புலிகுத்தி பாண்டி படம் தியேட்டரில் வெளியாகியிருந்தால் கம்பேக் கொடுத்திருப்பாரோ, என்னமோ.

நீங்க எல்லாம் நல்லா வரணும் சார்!

Trending News