திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எப்படி போனேனோ அதேபோல திரும்பி வந்துட்டேன்.. 10 வருடத்திற்கு பின் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த விக்ரம் பிரபு

சிவாஜியின் குடும்ப வாரிசாக விக்ரம் பிரபு அச்சு அசல் கிராமத்து கதாநாயகன் போலவே சினிமா கேரியரை தொடங்கி, அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார். இவர் தமிழ் சினிமாவிற்கு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த பிறகு இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு என தொடர்ந்து 4 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

சிவாஜி குடும்பத்திலிருந்து வந்த பிரபு வாரிசான இவரை மொத்த கோலிவுட்டும் வாயை பிளந்து பார்த்தது. இந்த தம்பி தொட்டதெல்லாம் துலங்குகிறது என ஒட்டுமொத்தத்திரை பிரபலங்களுமே ஆச்சரியத்தில் உறைந்தது. ஆனால் இவர்கள் எல்லாம் வச்ச வாய்தான், அடுத்தடுத்து விக்ரம் பிரபுவின் சினிமா கேரியரில் இடி விழுந்தார் போல் தொடர் தோல்விகள்.

Also Read: ரீ என்ட்ரியில் சரத்குமார் பட்டையை கிளப்பிய 6 படங்கள்.. பழுவேட்டையராக ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியான சுப்ரீம் ஸ்டார்

வெள்ளக்காரதுரை, வாகா, நெருப்புடா, பக்கா, அசுர குரு என எந்திரிக்க முடியாத தொடர் தோல்விகளை விக்ரம் பிரபு சந்தித்தார். அவ்வளவுதான் சோலி முடிஞ்சிடுச்சு என போட்டி நடிகர்கள் எல்லாம் பெருமூச்சு விட்டனர். கிட்டத்தட்ட காணாமல் போன நிலைமைக்கு விக்ரம் பிரபு வந்து விட்டார். ஆனால் 2022 ஆம் ஆண்டு டாணாக்காரன் என்ற படம் மூலம் தன்னை நிரூபித்துள்ளார் விக்ரம் பிரபு.

தமிழ் சினிமாவிற்கு இதுவரை சொல்லப்படாத கதைதான் டாணாக்காரன். காவல்துறை சம்பந்தப்பட்ட எத்தனையோ படங்கள் கோலிவுட்டில் வந்திருந்தாலும், அவையெல்லாம் காவல்துறை அதிகாரிகளை பற்றியதும் காவல் நிலையம் பற்றியதுமாகத்தான் இருந்தது.

Also Read: Paayum Oli Nee Enakku Movie Review- விக்ரம் பிரபுவின் மிரட்டலான நடிப்பில் பாயும் ஒளி நீ எனக்கு.. முழு விமர்சனம்

ஆனால் காவல்துறையில் உள்ள பயிற்சி பள்ளியை அப்படியே டாணாக்காரன் படத்தில் காட்டினர். இந்த படத்தில் போலீஸ் ட்ரைனிங்கில் இருப்பவர்களுக்கு எப்படி எல்லாம் பயிற்சி அளிக்கின்றனர், என்னென்ன சவால்களை எல்லாம் சந்திக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டினர்.

இதில் விக்ரம் பிரபுவின் நடிப்பு மிகச் சிறப்பாக நடித்திருந்தார் . அவர் திறமைக்கு தீனி போடும் வகையில் இருந்ததால், ‘எப்படி போனேனோ அதேபோல திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என சூப்பர் ஹிட் கொடுத்து 10 வருடத்திற்கு பின் ஹாட்ரிக் சாதனையை படைத்தார்.

Also Read: விக்ரம் பிரபுவுக்கு வெளிச்சம் காட்டியதா பாயும் ஓளி நீ எனக்கு.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Trending News