வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சண்டை போட காரணம் வேணாம் கணவன் மனைவியா இருந்தாலே போதும்.. கவனம் ஈர்க்கும் இறுகப்பற்று ட்ரெய்லர்

Irugapatru Trailer: சண்டை போடாத கணவன் மனைவிய கனவுல கூட பார்க்க முடியாது. காதலிக்கும் போது இருக்கும் அன்பு திருமணத்திற்கு பிறகு குறைந்து போவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக உருவாகி இருக்கும் படம் தான் இறுகப்பற்று.

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. அதன் ஆரம்பத்திலேயே பல்வேறு மனநிலையில் இருக்கும் தம்பதிகள் காட்டப்படுகின்றனர்.

Also read: வெங்கட் பிரபுவோடு ஷாட் பூட் த்ரீ விளையாடும் சினேகா.. ட்ரெண்டாகும் ட்ரெய்லர்

மனைவியிடம் காதல் உணர்வை எதிர்பார்க்கும் ஸ்ரீ, மனைவி குண்டாக இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விதார்த் என ட்ரெய்லர் ஆரம்பத்திலேயே சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதை தொடர்ந்து மனநல ஆலோசகராக வரும் ஷ்ரத்தா, அவரின் கணவராக வரும் விக்ரம் பிரபு என ஒவ்வொன்றும் கவனம் ஈர்த்துள்ளது.

அதிலும் கணவன் மனைவிக்குள்ள சண்டை வருவதற்கு காரணம் தேவையில்லை, கணவன் மனைவியா இருக்கிறதே பெரிய காரணம் தான் என்ற வசனம் எதார்த்தத்தின் வெளிப்பாடு. இப்படி எதிரும் புதிருமாக இருக்கும் தம்பதிகளின் உளவியல் பிரச்சனை குறித்து இப்படம் பேசுகிறது.

Also read: லியோவுக்கு முன் 462 கிலோமீட்டரில் ரிவெஞ் எடுக்கும் திரிஷா.. வைரலாகும் “தி ரோடு” ட்ரெய்லர்

வரும் அக்டோபர் 6ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் விக்ரம் பிரபுவுக்கு நிச்சயம் ஒரு கம்பேக்காக இருக்கும். அதே போன்று மாநகரம் ஸ்ரீ எங்கப்பா என தேடி வந்த நிலையில் அவருடைய என்ட்ரியும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படியாக வெளிவந்துள்ள ட்ரெய்லர் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

Trending News