Paayum Oli Nee Enakku Twitter Review: கும்கி என்ற தன்னுடைய முதல் படத்திலேயே விக்ரம் பிரபு மாபெரும் வெற்றியை கொடுத்தாலும் அதன் பிறகு அவர் நடிப்பு திறமைக்கு தீனி போடும் விதமாக படங்கள் அமைந்தது குறைவு தான். கடைசியாக விக்ரம் பிரபு நடிப்பில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெளியான படம் டாணாகாரன்.
இந்நிலையில் தரமான வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரம் பிரபுவின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கிறது பாயும் ஒளி நீ எனக்கு. இப்படத்தை கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். மேலும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து தனஜெயன் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பாயும் ஒளி நீ எனக்கு படம் பக்கா கமர்சியல் படமாக வெளியாகி உள்ளது. அதாவது அதிகப்படியான வெளிச்சத்தில் மட்டும் தான் கண் தெரியும் என்றும் குறைந்த ஒளியில் குருட்டுத் தன்மை என்பதை மையமாக வைத்து இப்படம் எடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை நன்றாக உள்ளது.

அதை விவரிக்கும் முறை மற்றும் காட்சி அமைப்பதில் இயக்குனர் சற்று தடுமாறி இருக்கிறார். படத்தில் முக்கிய பிளஸ் ஆக ஒளிப்பதிவு உள்ளது. பாயும் ஒளி நீ எனக்கு படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். வாணி போஜன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஈடு கொடுத்துள்ளார்.

Also Read : ஆம்பளனா ரத்தம் இருக்கணும், அதுவும் சுத்தமா இருக்கணும்.. வெறியோடு கிளம்பிய விக்ரம் பிரபுவின் ரெய்டு டீசர்
மேலும் படத்தில் நடிகர் தனஜெயனின் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருந்ததாக ரசிகர் ஒருவர் ட்விட்டர் விமர்சனம் கொடுத்து இருக்கிறார். இப்படத்திற்கு இசை உறுதுணையாக இருந்ததாகவும், ஆக்ஷன் காட்சிகள் நன்றாக இருந்ததாகவும் ரசிகர் ஒருவர் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

மேலும் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் சில இடங்களில் தொய்வு இருக்கிறது. ஆனால் அடுத்தடுத்த காட்சி என்ன இருக்கும் என்று ரசிகர்களை எதிர்பார்க்கும் படி இப்படம் கொண்டு சென்றுள்ளது. மேலும் நிறைய புது முயற்சிகளை படத்தில் இயக்குனர் கையாண்டுள்ளார் என ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விக்ரம் பிரபுவுக்கு கண்டிப்பாக வெளிச்சத்தை பாயும் ஒளி நீ எனக்கு தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

Also Read : விலங்குகளை ஹீரோவாக வைத்து எடுக்கப்பட்ட 5 படங்கள்.. விக்ரம் பிரபுவை தூக்கிவிட்ட கும்கி