வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நாலாபக்கமும் பிரச்சனை, உச்சக்கட்ட விரக்தியில் விக்ரம்.. நெஞ்சு வலிக்கு இதுதான் காரணமோ?

சமீபகாலமாக விக்ரம் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. சினிமா பின்புலம் இல்லாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் இந்த உயரத்தை அடைந்தவர் விக்ரம். இதனால் இந்த வாய்ப்பை எளிதில் விட்டுவிடக் கூடாது என தொடர்ந்து போராடி வருகிறார்.

இதனால் மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என முனைப்பில் செயல்பட்டு வருகிறார். ஆனால் இவர் நடித்துள்ள மூன்று படமும் ஏதோ ஒரு பிரச்சினையில் உள்ளது. இதனால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் வெளியாகாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு நாலாபக்கமும் உள்ள பிரச்சனையால் தான் விக்ரமுக்கு நெஞ்சுவலி வந்ததாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அது வதந்தியாக இருந்தாலும் அவர் நடித்த ஒரு படம்கூட இன்னும் வெளியாகவில்லை என்ற விரக்தியில் தான் விக்ரம் உள்ளார்.

பொன்னியின் செல்வன் : மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா என ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம் நடித்த காட்சிகள் நிறைய கட் செய்து உள்ளதாக கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் விக்ரமுக்கு சம்பள பிரச்சனையும் இருந்ததாம். இதனால்தான் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்ற கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் அதிக நாட்டம் காட்ட மறுக்கிறார்.

கோப்ரா : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பத்திற்கும் மேற்பட்ட கெட்டப்பில் நடித்திருக்கும் படம் கோப்ரா. இப்படத்தின் ரிலீஸ் பலமுறை தள்ளிப் போன நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என கூறி உள்ளனர். ஆனால் இந்த படத்தில் VFX வேலைகள் இன்னும் மீதமிருக்கிறது. இதனால் இப்போதைக்கு படம் வெளியாவது சந்தேகம்தான்.

துருவ நட்சத்திரம் : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் துருவ நட்சத்திரம். இப்படம் 2017 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்தப்படத்தில் என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் படத்தை ரிலீஸ் செய்யாமல் இழுத்துக்கொண்டே போகிறார்கள்.

Trending News