Vikram: தானாய் வேரூன்றி முளைத்த செடி போல தான் விக்ரம் சினிமாவில் தன்னுடைய முயற்சியால் இந்த நிலைமைக்கு வந்து உள்ளார். ஆனால் சமீபகாலமாக அவர் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் போகவில்லை.
இந்த சூழலில் பா ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த தங்கலான் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதை அடுத்து அவர் நடிக்கும் படம் தான் வீரதீரசூரன். இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர்.
மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சில வெளியான நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் விக்ரமின் வீட்டு வாசலில் பல தயாரிப்பாளர்கள் காத்துக் கிடக்கிறார்களாம்.
சம்பளத்தை உயர்த்திய விக்ரம்
அடுத்தடுத்த படங்களை புக் செய்ய சத்யஜோதி பிலிம்ஸ், டான் பிக்சர்ஸ் போன்றோர் முன்வந்துள்ளனர். ஆகையால் எந்த தயாரிப்பு நிறுவனத்தை தேர்வு செய்வது என்று தெரியாத அளவுக்கு கை நிறைய படங்களை வைத்திருக்கிறார் விக்ரம்.
மேலும் இப்போது ஒரு படத்திற்கு 50 கோடி வரை விக்ரம் சம்பளம் கேட்கிறாராம். அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து தயாரிக்கவும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளது. கோப்ரா படம் தோல்வி அடைந்தபோது மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார்.
ஆனால் இப்போது தங்கலானால் அவருக்கு ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது. எனவே விக்ரமின் சினிமா கேரியர் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கலாம். அவரின் திறமைக்கு சரியான அங்கீகாரம் இனி தான் கிடைக்கப் போகிறது.