ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விக்ரமுக்கு அடுத்த ஹிட் பார்சல்.. சிலாகித்து எஸ் ஜே சூர்யா சொன்ன புது தகவல்

விக்ரம் அடுத்தடுத்த பெயிலியருக்கு பின் பலமாக எழுந்து வருகிறார். கேரியரை தூக்கி நிறுத்தும் படங்களை கமிட் செய்து மீண்டும் சினிமாவை துறுதுறுவென முதலில் இருந்து ஆரம்பிக்கிறார். கைவசம் இரண்டு படங்கள் இருக்கிறது இரண்டுமே அவரை சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்கின்றனர்.

எப்பொழுதுமே நடிப்பில் அவர் எதையும் மிச்சம் வைக்க மாட்டார். அந்த அளவுக்கு தற்போது நடிக்கும் இரண்டு படங்களில் மிரட்டிவருகிறார். அந்த இரண்டுமே அவருக்கு சூப்பர் ஹிட் ஆகும் என்கின்றார்கள். மீண்டும் தில், தூள் படங்களில் பார்த்த விக்ரம் போல் படப்பிடிப்பில் அட்டகாசம் செய்கிறாராம்.

தங்கலான்: ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் பா ரஞ்சித் இயக்கி வரும் படம் தங்கலான்.கிட்டத்தட்ட 120 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக விக்ரம் தனது உடல் எடையை குறைத்து வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார். அந்நியன், ஐ, வரிசையில் இந்த படமும் அவருக்கு நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும்.

சிலாகித்து எஸ் ஜே சூர்யா சொன்ன புது தகவல்

வீரதீர சூரன் பாகம் 2: இந்தப் படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் ஆகி சக்க போடு போட்டது. இந்த படத்தில் பெட்டிக்கடை வியாபாரியாக விக்ரம் வரும் காட்சிகள் தூள் பறக்கிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். விக்ரம் சூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பில் எல்லாரையும் மிஞ்சி உச்சம் தொட்டு விடுகிறார் என எஸ் ஜே சூர்யா சிலாகித்து பேசி வருகிறார்.

இந்த படத்தில் விக்ரமுக்கு நிறைய அவார்டுகள் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. அது மட்டுமின்றி இந்தப் படத்தின் இயக்குனர் அருண்குமார் எடுத்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டானவை. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா என எல்லா படங்களும் பேசப்பட்டவை

Trending News