வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மார்க்கெட் போயிடும் என ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விக்ரம்.. தரமான செலக்சன் செய்த ஜெய் பீம் இயக்குனர்

ரஜினி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் மற்றும் லால் சலாம் படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. இதற்கு அடுத்து இவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குவது ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல். இவர் ரஜினியிடம் மொத்த ஸ்கிரிப்ட்டையும் சொல்லி அவர் மிகவும் வியந்து போனதால் உடனே கால்ஷீட் கொடுத்து விட்டார். ஏனென்றால் தற்போது ரஜினியின் எதிர்பார்ப்பு கமல் எப்படி விக்ரம் படத்தை கொடுத்தாரோ அதே மாதிரி நாமும் ஒரு பிரம்மாண்ட படத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான்.

அதற்காக ஜெய்பீம் இயக்குனருடன் கூட்டணி வைத்துவிட்டார். இப்படம் ஜூலை மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. அத்துடன் கதைப்படி ரஜினிக்கு வில்லனாக ஒரு மாஸ் ஹீரோவே இறக்குவதற்காக நடிகர் விக்ரமிடம் பேசப்பட்டது. இவர் ரெண்டு கட்ட யோசனையில் இருந்ததால் தயாரிப்பாளர் நேரடியாக இவரிடம் பேசி சம்பளத்தை 50 கோடி தருவதாக சொல்லியிருந்தார்.

Also read: ரஜினி, விஜயகாந்த் போல கோட்டை விடக்கூடாது.. நின்னு நிதானமாக காய் நகர்த்தும் தளபதி, உதவும் பெரிய புள்ளி

இதன் பிறகு 90% நடிக்கலாம் என்று இருந்த நிலையில் திடீரென்று இவர் யோசித்தது ரஜினிக்கு வில்லனாக நடித்தால் சினிமாவில் நம்மளுடைய மார்க்கெட் காலியாகி விடும் என்பதால் தீர்க்கமான முடிவு எடுத்து விக்ரம் இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு முடியாது என்று சொல்லிவிட்டார். பின்பு விக்ரம் வராததால் இந்த கதாபாத்திரத்துக்கு அடுத்து பொருந்தக்கூடியவர் சூர்யா தான் என்று இயக்குனர் பார்வை அவர் பக்கம் திரும்பி விட்டது.

அதே நேரத்தில் கண்டிப்பாக சூர்யாவிடம் கேட்டால் நடிக்க சம்மதிப்பார் என்று நம்புகிறார். அதற்கு காரணம் ஏற்கனவே சூர்யா, கமல் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்து அவர் எதிர்பார்க்காத படி பெயர் கிடைத்ததால் அவர் கண்டிப்பாக ரஜினி படத்தில் வில்லனாக நடிப்பதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்று உறுதியாக நம்புகிறார்.

Also read: ரஜினியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய ஐஸ்வர்யா.. லால் சலாமில் நடந்துள்ள தரமான சம்பவம்

அதே மாதிரி சூர்யா, ரஜினி படத்திலும் வில்லன் கேரக்டரில் நடித்து பெயர் எடுத்து விட்டால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் இவரும் ஒருவராக மாறிவிடுவார். அதனால் இவருடைய மார்க்கெட் ரேஞ்சும் கூடி சம்பளம் அதிகமாக கூடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இதனை வைத்து அவருடைய அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை ஏற்றலாம் என்று ஜெய்பீம் இயக்குனர் சூர்யாவுடன் பேச்சு வார்த்தையில் இந்த கருத்துக்களை முன் வைக்க இருக்கிறார்.

அத்துடன் ரஜினியும் இதுவரை அவருடைய படங்களில் மற்ற ஹீரோக்கள் நடிப்பதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார். ஆனால் எப்பொழுது கமல், விக்ரம் படத்தில் நிறைய ஹீரோக்களை இறக்கினாரோ அதன் பிறகு இவரும் அவருடைய முடிவை மாற்றிக் கொண்டார். அதனால் இப்படத்தில் ரஜினிக்கு நிகரான வில்லன் சூர்யா தான் என்று ஜெய் பீம் இயக்குனர் சரியான செலக்சனை எடுத்து இருக்கிறார். இது ரஜினி மற்றும் சூர்யாவின் ரசிகர்களை அதிக பரபரப்பை ஏற்படுத்த இருக்கிறது. கண்டிப்பாக இப்படத்தில் ஒரு தரமான சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது.

Also read: பல ஹீரோக்களை மிகப்பெரிய திறமைசாலியாக மாற்றிய ஒரே வில்லன்.. பாட்ஷா படத்துல ரஜினிக்கு இருந்த நடுக்கம்

Trending News