Vikram Replaced Ajith: நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் படங்களை மிஸ் பண்ணியதாக தகவல்கள் வெளியாவது உண்டு. கதை பிடிக்காமல், இயக்குனர்களுடன் ஒத்துழைப்பு ஏற்படாமல் அஜித் இந்த முடிவை எடுத்திருப்பார். பாலாவின் படமான நான் கடவுள் படத்தில் கூட அஜித் தான் முதலில் நடிப்பதாக இருந்ததாக கூட சொல்லப்பட்டது. அதேபோன்றுதான் ஒரு சூப்பர் ஹிட் படத்திலும் அவர் நடிக்க இருந்து பின் விலகி இருக்கிறார்.
சூப்பர் ஹிட் படத்தில் ஒப்பந்தமாகி இருந்த அஜித் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 40% படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படத்தின் இயக்குனருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார். பின்னர் நடிகர் விக்ரம் நடித்து அந்தப் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து இருக்கிறது.
அஜித் மற்றும் சரண் கூட்டணி
அஜித்துக்கு காதல் மன்னன் மற்றும் அமர்க்களம் என்ற இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் தான் சரண். இவர்கள் இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக 2001 ஆம் ஆண்டு இணைந்திருக்கிறார்கள். பிரபல ரவுடி வெள்ளை ரவியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த கதை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு ஏறுமுகம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
Also Read:இவ்வளவு கஷ்டத்திலும் எனக்கென்னன்னு வெளிநாடு கிளம்பிய அஜித்.. தயாரிப்பாளர் கொடுக்கும் டார்ச்சர்
ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லைலா மற்றும் ரிச்சா பலோட் இணைந்து நடிக்க இருந்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் அஜித்திற்கு கதை மீது இருந்த ஈடுபாடு குறைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் படத்தில் இருந்து விலகுவதாக சொல்லி இருக்கிறார். இயக்குனர் சரண் இனி நான் அஜித்துடன் இணைந்து பணியாற்ற போவதே இல்லை என மீடியா முன் தெரிவித்திருக்கிறார்.
பின்னர் இயக்குனர் சரண் அந்த படத்தின் கதையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார். நடிகர் விக்ரமிடம் இந்த கதையை சொல்லி, அவருக்கு பிடித்துப் போனதால் அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏறுமுகம் என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் படத்தில் ஜெமினி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த 2002 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி ஜெமினி படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்த கசப்பான சம்பவங்களுக்கு பிறகு அஜித் மற்றும் சரண் இரண்டு வருடங்கள் கழித்து சமாதானம் ஆகினார்கள். இவர்கள் இருவரது கூட்டணியில் 2004 ஆம் ஆண்டு அட்டகாசம் என்னும் படம் ரிலீஸ் ஆனது. தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு அசல் என்னும் படமும் ரிலீஸ் ஆனது. அமர்க்களம் போன்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரண் 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த படமும் இயக்கவில்லை.
Also Read:அஜித்துடன் சண்டை முத்தியதால் இப்ப வர ஒன்று சேராத 4 பிரபலங்கள்.. 21 வருடங்களாக ஓடாத வடிவேலு