பொங்கலுக்கு ரிலீசான விஜயின் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் 250 கோடியை தாண்டி உலகெங்கும் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த படத்தைக் குறித்து விஜய் தற்போது இனம் புரியாத பயத்திலுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 67 படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின் போன்ற மிகப்பெரிய வில்லன் பட்டாளமே நடித்து வருகிறார்கள். இவர்களின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் லோகேஷ் செதுக்கி உள்ளாராம்.
Also Read: தளபதி 67-ல் விஜய்க்கு முக்கியத்துவம் இல்லையாம்.. லோகேஷ் போட்டிருக்கும் ஸ்கெட்ச்
இதில் எப்படி விஜய் ஸ்கோர் பண்ண போகிறாய் என்று நினைத்த நிலையில், தற்போது இந்த படத்தில் விக்ரம் இணையவிருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. இந்த வில்லன் எல்லோருக்கும் தலைவன் விக்ரமாக இருப்பார் என தகவல் வெளிவந்துள்ளன.
பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லன்கள் ஹீரோ போல காட்சிப்படுத்துவார். இதில் நடிப்பு அரக்கன் விக்ரம் வில்லனாக நடித்த எப்படி இருக்கும் என பேசி வருகிறார்கள். இதனால் விக்ரமுக்கு முக்கியத்துவம் அதிகம் இருப்பதால் விஜய்க்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்காது.
Also Read: கிசு கிசுப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்.. விஜய்க்கு கொடுத்த மிகப்பெரிய ஷாக்
இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். ஏனென்றால் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்யை விட வில்லனாக நடித்த விஜய் சேதுபதி கதாபாத்திரம் தான் அதிகம் பேசப்பட்ட கேரக்டராக இருந்தது.
அதனால் தற்போது விஜய் சேதுபதி இடத்தை தளபதி 67 படத்தில் விக்ரம் பிடிப்பதால், விக்ரமின் கதாபாத்திரத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் தளபதி டம்மி ஆகி விடுவார் என்கின்ற பயம் தற்போது விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. இதை எப்படி சமாளிப்பது என்றும் தீவிரமாக யோசித்து வருகிறார்.
Also Read: டான்ஸ், சிக்ஸ் பேக் என ஏற்றியும் பிரயோஜனம் இல்ல.. விஜய்க்கு வில்லன் ஆகியும் கண்டுக்காத சினிமா