திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரஞ்சித், உனக்கு படம் கொடுக்க காரணம் இதுதான்.. கரணம் தப்புனா மரணம் நிலைமையில் விக்ரம்

சீயான் விக்ரம் நடிப்பில் ஏகப்பட்ட பட அறிவிப்புகள் வருதே தவிர ஒரு படமும் மொத்தமாக முடிந்து ரிலீஸ் ஆன பாடில்லை. இப்படித்தான் கடந்த மூன்று வருடங்களில் மகான், கோப்ரா, துருவ நட்சத்திரம் என விக்ரம் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் உருவாகி வந்தன. ஆனால் எல்லாமே பாதிக்கிணறு தாண்டி மீது கிணறு தாண்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

விக்ரம் அந்த படத்தை எல்லாம் முடித்து ரிலீசுக்கான வேலையில் இறங்குவார் என்று பார்த்தால் திடீரென பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க போவதாக அறிவிப்பை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது என்னடா புது கதை என தேடிப் பார்த்தபோது தான் நிறைய விஷயங்கள் கிடைத்துள்ளது.

முதலில் நீண்ட காலமாக விக்ரமுக்கு வெற்றி படம் எதுவும் அமையவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அது அவருக்கும் தெரியும். அதனால்தான் வெற்றிப் படங்கள் கொடுத்த இயக்குனர்களின் படங்களில் தேடி தேடி நடித்து வருகிறார். பா ரஞ்சித் படம் கூட அப்படித்தான் சமீபத்தில் வந்த சார்பட்டா படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்ப இவருடன் சேர்த்தால் நமக்கு வெற்றி கிடைக்குமென நம்பி இறங்கியுள்ளார்.

அதற்கு காரணமே துருவ் விக்ரம் தான் என்கிறார்கள். துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பது பா ரஞ்சித். தன்னுடைய மகனை முன்னணி நடிகராக கொண்டுவரவேண்டும் என்பது விக்ரமின் ஆசை.

அதற்காக தன்னுடைய மகன் நடிக்கும் அனைத்து படங்களிலும் மூக்கை நுழைத்து கதை கேற்பது இயக்குனரை தேர்வு செய்வது என தந்தையாக ஒரு மகனுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறார். அப்படி அடிக்கடி பா ரஞ்சித்தை சந்திக்கும் போது தான் தனக்காக ஒரு கதையை எழுதும் படி கேட்டுள்ளார்.

ரஞ்சித்திடம் ஓபனாகவே சொல்லிவிட்டாராம் விக்ரம். தம்பி, எனக்கு கொஞ்சம் வருஷமா ஒரு ஹிட் படம் கூட இல்ல. இதனால மார்க்கெட் ரொம்ப அடி வாங்கிருச்சு. எப்படியாச்சும் ஒரு ஹிட் படம் கொடுத்தா தான் அடுத்தடுத்த படங்களுக்கான வியாபாரம் நடக்கும்னு தயாரிப்பு தரப்பிலிருந்து செம பிரஷர்.

நீங்க ஒரு சின்ன பட்ஜெட்டில் சூப்பர் படம் ஒன்னு எடுத்துக் கொடுங்க. அத முதல்ல ரிலீஸ் பண்ணிட்டு என்னோட அடுத்தடுத்த படங்களை நான் ரிலீஸ் பண்ணிக்கிறேன், வேற வழி இல்லை எனக்கூறி பா ரஞ்சித்திடம் சரண்டர் ஆகி விட்டாராம் விக்ரம்.

Trending News