திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முரட்டு மொட்டை லுக்கில் கதிகலங்க வைத்த விக்ரம்.. லோகேஷால் எடுக்கும் புது அவதாரம்

Actor Vikram New Look: தமிழ் சினிமாவில் உலக நாயகனுக்கு அடுத்ததாக, படங்களுக்கு ஏற்ற மாதிரி தோற்றங்களை மாற்றிக் கொண்டு அதிக கெட்டப்புகளை போட்டு நடிக்கும் நடிகர் யார் என்றால் அது சியான் விக்ரம் தான். அந்த அளவிற்கு இவருடைய முழு பங்களிப்பையும் சினிமாவிற்காக அர்ப்பணிக்க கூடியவர். அப்படிப்பட்ட இவர் உடலை வருத்திக்கொண்டு, தோற்றங்களை மாற்றி கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி தன்னை அசிங்கமாகவும் காட்டி நடிக்கக் கூடியவர்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது மாற்றங்கள் இருக்க வேண்டும் என்று நடிப்பிலும் சரி, கெட்டப்பிலும் வித்தியாசத்தைக் காட்டி பிரமிக்க வைப்பார். ஆனாலும் சில காரணங்களால் இவருடைய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காமல் போய்விடுகிறது.

Also read: விக்ரம் போல கட்டுமஸ்தானாக மாறிய துருவ் விக்ரம்.. மாரி செல்வராஜ் வெளியிட்ட புகைப்படம்

ஆனால் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் ஆக மறுபடியும் ரசிகர்கள் விக்ரமை தூக்கி கொண்டாடும் அளவிற்கு நடிப்பு பிரமாதமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

இந்த படம் எப்படியாவது ஹிட் ஆக வேண்டும் என்று இதுவரை மற்ற படங்களில் கொடுத்ததை விட இப்படத்திற்கு அதிக கடின உழைப்பை போட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இப்படத்தை முடித்த கையோடு இவருடைய அழகான தோற்றத்தை காட்டும் படி நியூ லுக் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார்.

Also read: 19 வருடங்களுக்கு முன்பு அவமானப்படுத்தப்பட்ட விக்ரம்.. தேடி வந்த உதவியால் கூனி குறுகி போன தயாரிப்பாளர்

இந்த புகைப்படத்தில் முரட்டு மொட்டை லுக்கில், வெள்ளை நிற சட்டை, நீல நிறத்தில் பேண்ட், கருப்பு சன் கிளாஸ் போட்டுக்கிட்டு ஸ்டைலாக போஸ் கொடுத்து ரொம்பவே கூலாக அனைவரும் ரசிக்கும் படியாக புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதில் இவரை பார்க்கும் பொழுது பீமா படத்தில் இவருடைய தோற்றத்தை பார்ப்பது போல் இருக்கிறது என்று ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த புது தோற்றம் கண்டிப்பாக இவருடைய அடுத்த படத்திற்கான அஸ்திவாரமாக தான் இருக்கும். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் உதவியாளர் மகேஷ் பாலசுப்பிரமணியன் இயக்கத்தில் இவர் இணையப் போகிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது. அத்துடன் இப்படத்திற்கு முழுக்கதையும் லோகேஷ் தான் எழுதுகிறார். அந்தப் படத்தில் நடிப்பதற்காக இந்த தோற்றத்துடன் பிரதிபலிக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளிவரப் போகிறது.

அழகான விக்ரமின் புது தோற்றத்தின் புகைப்படம்

Vikram-New-look
Vikram-New-look

Also read: உச்சம் தொட்டாலும் அலட்டலும், ஆணவமும் இல்லாத 5 நடிகர்கள்.. எதையும் கொண்டாடாத விக்ரம்

Trending News