வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தோல்வி பயத்தால் மாரி செல்வராஜிடம் சரணடைந்த விக்ரம்.. அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அடுத்த பட அப்டேட்

இயக்குனர் மாரி செல்வராஜ் மற்ற இயக்குனர்கள் எடுக்க தயங்கும் கதை களத்தை தைரியமாக எடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இப்போது வாழை என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார்.

மெட்ராஸ் படத்தின் மூலம் பிரபலமான கலையரசன் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் மாரி செல்வராஜ் பேசியிருந்தார். அதாவது பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் சார்பாக துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் பண்ணுவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

Also Read : மீண்டும் தூசு தட்டப்படும் கௌதம் மேனனின் படம்.. வசமாய் சிக்கி கொண்ட விக்ரம்

ஆனால் சில காரணங்களினால் இந்த படம் தடைபட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மாரி செல்வராஜ் பேசுகையில் பா ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படம் பண்ணுவதாக ஏற்கனவே ஒற்றுக்கொண்டேன். அப்போது தான் உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் பட வாய்ப்பு வந்ததால் ரஞ்சித் அந்தப் படத்தை முதலில் எடுத்துவிட்டு வாருங்கள் என்று கூறினார்.

அதன் பின்பு வாழை படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்நாளில் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால கனவு. இப்போது இந்த படம் முடிந்த பிறகு ரஞ்சித் தயாரிப்பில் படம் பண்ணுவதாக மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ஆகையால் துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி தற்போது உறுதியாகி உள்ளது.

Also Read :  பழிக்குப் பழி வாங்கிய இயக்குனர்.. இன்று வரை ஜெயிக்க முடியாமல் தவிக்கும் துருவ் விக்ரம்

துருவ் விக்ரம் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் அவரது கேரியர் போய் விடக்கூடாது என்ற காரணத்தினால் மாரி செல்வராஜ் இடம் விக்ரம் ஒப்படைத்துள்ளார். ஏனென்றால் மாரி செல்வராஜ் தன்னுடைய படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஹீரோவை செதுக்கி விடுவார்.

எனவே இந்த படத்திற்காக துருவ் விக்ரம் ஆயத்தமாகி வருகிறாராம். மாரி செல்வராஜ் அதற்கான கதையை ஏற்கனவே தயார் செய்து விட்டாராம். மேலும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் துருவ் விக்ரமை தமிழ் சினிமா விரும்பி பார்க்கும் என்ற நம்பிக்கையில் விக்ரம் உள்ளார்.

Also Read : தளபதி 67 படத்தில் விக்ரம் இல்லையா!. பெரிய பிளான் போட்டிருக்கும் லோகேஷ்

Trending News