மருதநாயகத்தை மிஞ்சிய விக்ரமின் தங்கலான் வீடியோ.. காட்டுவாசியாக வேட்டையாட வைத்த பா ரஞ்சித்

விக்ரமின் பிறந்த நாளான இன்று அவர் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் ஸ்பெஷல் மேக்கிங் வீடியோவை  படக்குழு வெளியிட்டு சியான் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து இருக்கின்றனர். தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கனாக பார்க்கப்படும் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் மேக்கிங் வீடியோவில் காட்டுவாசி போல் விக்ரம் மிரட்டலான கெட்டப்பில் பார்ப்பதற்கே பயமுறுத்தும் வகையில் இருக்கிறார். அதிலும் பா. ரஞ்சித்  காட்டுவாசிகளை வேட்டையாட கற்றுக்கொடுத்து கெத்து காட்டுகிறார். மேலும் உலகநாயகன் கமலஹாசனின் மருதநாயகம் கெட்டப்பை  மிஞ்சும் அளவுக்கு தங்கலான் படத்தில் விக்ரமின் கெட்டப் உள்ளது.

Also Read: கமலுடன் துணிந்து மோதும் விக்ரம்.. பலத்தை நிரூபிக்க எடுத்த கடைசி ஆயுதம்

 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் மலையாள நடிகை பார்வதி, மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் தங்கலான் படத்தின் நாயகன் விக்ரமின் 57-வது பிறந்த நாளான இன்று அந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர்.

இந்த வீடியோவில் விக்ரம் கொளுத்தும் வெயிலில் வேர்வை  சிந்தி நடித்திருக்கிறார். அது மட்டுமல்ல படக்குழுவினரும் கடுமையாக தங்கள் உழைப்பை அளித்திருப்பதும் கண்கூடாக தெரிகிறது. மேலும் இந்த வீடியோவில் விக்ரமை ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு டோட்டலாக மாற்றி இருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்.

Also Read: சீயான் விக்ரமின் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்.. தங்கலான் கொடுக்கப் போகும் அப்டேட்

மேலும் 57 வயதில் இவ்வளவு ரிஸ்க் எடுக்கும்  விக்ரமுக்கு தங்கலான் படம் அவரை திரையுலகின் உச்சத்திற்கே கொண்டு செல்ல போகிறது. மேலும் இந்தப் படத்தில் காட்டுவாசியாக விக்ரம் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை  வெளிக்காட்டியதை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ  இதோ!