வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விக்ரம் பட மாஸ் வீடியோ வெளியிட்ட படக்குழு.. இணையத்தை மிரட்டிய கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த சில வருடங்களில் வெளியான படங்கள் எதுவுமே அவர் நினைத்த அளவுக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. போதாக்குறைக்கு அரசியலில் நுழைந்து சினிமா அரசியல் என இரண்டிலுமே தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

சினிமா கைவந்த கலை தான் என்றாலும் இப்போதைக்கு அவரது சினிமா மார்க்கெட் கொஞ்சம் மோசமான நிலையில்தான் உள்ளது என்பது தெரிந்தது தான். ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டும் விதமாக வந்துகொண்டிருக்கிறது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைப்படம்.

இந்த ஒரு படம் கமலஹாசனின் கடந்த சில வருடங்களில் சரியாகிவிடும் என்கிற அளவுக்கு படத்தின் பேச்சுக்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் துப்பாக்கியில் கிட்டார் வாசிப்பது போல் வெளியான கமலஹாசன் போஸ்டர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தில் பணியாற்றி வருகிறார். படத்தின் அறிவிப்பில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர். மேலும் விக்ரம் படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படக்குழுவினர் விக்ரம் படத்தின் வீடியோவை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளனர். மேலும் கமலஹாசனுக்கு கிப்ட் ஆக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதைப் பார்க்கும் போதே படம் பட்டையைக் கிளப்பப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது.

லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய மாஸ்டர் படம் அவருடைய முந்தைய படங்கள் போல் இல்லை என்ற ஒரு கலவையான விமர்சனங்கள் இருந்த நிலையில் விக்ரம் படத்தின் ஒவ்வொரு விஷயமும் 100% லோகேஷ் படம் தான் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. மேலும் உலக நாயகனுக்கு விக்ரம்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படம் என்பது இப்போது உறுதியாகிவிட்டது.

Trending News