கேங்ஸ்டர் படம் எடுப்பதில் வல்லவர், நல்லவர் என ஒத்து ஊதிக் கொண்டிருந்த பலரும் கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் படம் வெளியான பிறகு ஆளே அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய்விட்டனர். அந்த அளவுக்கு படம் செம ஊத்து ஊத்திவிட்டது.
நல்ல வேளை இந்த படம் தியேட்டரில் வெளியாகவில்லை என தனுஷ் ரசிகர்கள் பெருமூச்சு விடும் அளவுக்கு இருந்தது படம். அதுமட்டுமில்லாமல் படமும் கேங்க்ஸ்டர் படத்திற்கு தகுந்த மாதிரி சுறுசுறுப்பாக இல்லாமல் கொஞ்சம் இழுபறியாக இருந்தது மேலும் படத்திற்கு பின்னடைவை கொடுத்தது.
தனுஷ் படத்தை பெரிய விலைக்கு வாங்கி பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளது நெட்ப்ளிக்ஸ். இது ஒருபுறமிருக்க ஜகமே தந்திரம் படத்தால் தான் இயக்கும் அடுத்த படத்திற்கும் பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்ததாக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கும் சீயான் 60 படம் உருவாகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் மீது இருந்த அதீத நம்பிக்கையால் தற்போது நடித்து வரும் கோப்ரா படத்தை கிடப்பில் போட்டார் விக்ரம்.
ஆனால் தற்போது ஜகமே தந்திரம் படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்தபடி அமையாததால் பேசாமல் கோப்ரா படத்தையே முதலில் முடித்து ரிலீஸ் செய்து விடலாமா என யோசித்து வருகிறாராம்.

இருந்தாலும் வேறு வழி இல்லையே என தற்போது கார்த்திக் சுப்புராஜிடம் மீண்டும் ஒருமுறை கதை சொல்லச் சொல்லி கேட்டுள்ளாராம். நமக்கு தெரிந்த தவறுகளை இப்போதே திருத்தி விடலாம் என யோசிக்கிறாராம்.