பாலா மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சேது. அதுவரை அதிர்ஷ்டமில்லாத நடிகர் என தமிழ் சினிமாவில் பெயரெடுத்த விக்ரம் சேதுவுக்கு பிறகு வசூல் நாயகனாக உயர்ந்தார்.
அதற்கு பாலாவும் ஒரு காரணம். தொடர்ந்து ஏழு தோல்விப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் ராசியில்லாத நடிகர் என ஒதுக்கியவரை வைத்து நான் வெற்றிப்படம் கொடுக்கிறேன் என முடிவு செய்து விக்ரமுக்கு சேது என்ற பிரமாண்ட வெற்றிப்படத்தைக் கொடுத்தார்.
இளையராஜா இசையில் சேது படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் இன்றும் ரசிகர்கள் ரசிக்கும் விதம் அமைந்தது. அதுமட்டுமில்லாமல் சிவகுமார், விக்ரமின் நண்பர்கள் என படம் முழுக்க ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் ஆணி அடித்ததுபோல் பதிந்து விட்டது.
மேலும் கில்மா படங்களில் நடித்துக் கொண்டிருந்த அபிதா என்பவரை குடும்ப குத்து விளக்கு நாயகியாக மாற்றிக் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தார் பாலா.
இப்படி தமிழ் சினிமாவை திருப்பி போட்ட சேது படத்தில் முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் நடிகர் விக்னேஷ் என்பவர் தானாம். ஆனால் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையிலேயே அவருக்கு இந்தக்கதை பிடிக்கவில்லை என ஒதுங்கிவிட்டாரம். விக்னேஷ் தமிழில் பொங்கலோ பொங்கல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தை பார்த்துவிட்டு இந்த படம் விக்ரமுக்கு தான் சரியாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை விக்னேஷ் நடித்திருந்தால் இந்த படம் வெற்றி பெற்றிருக்குமா? என்பது சந்தேகம்தான்.
![actor-vignesh-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/actor-vignesh-cinemapettai.jpg)