வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சோழர்களை பெருமைப்படுத்திய விக்ரம்.. கட்டியணைத்து பாராட்டிய பொன்னியின் செல்வன்

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கான ப்ரொமோஷன்கள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பட குழுவினர் அனைவரும் ஹைதராபாத், மும்பை என்று பல இடங்களிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். அதில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் பல சுவாரசியமான விஷயங்களை நகைச்சுவையாக பேசி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் பாலிவுட் ரசிகர்களுக்காக சோழர்களின் பெருமையை பற்றி ஆங்கிலத்தில் பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் நடந்த பட பிரமோஷனில் விக்ரம் தஞ்சாவூர் பற்றியும், பொன்னியின் செல்வன் பற்றியும் பல தகவல்களை ரசிகர்களுக்கு கூறினார்.

Also read:விக்ரமால் நடிக்க முடியாமல் திணறிய விக்ரம் பிரபு.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

அதில் அவர் சாய்ந்து நிற்கும் கோபுரங்களை பார்த்து அதிசயமாக பலரும் செல்பி எடுத்து வருகின்றனர். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டு இன்றுவரை கம்பீரமாக இருக்கும் தஞ்சை பெரிய கோவில் எப்படி உருவானது தெரியுமா என்று அவர் விளக்கமாக கூறியிருக்கிறார்.

தஞ்சை பெரிய கோவிலை பற்றி தமிழர்களுக்கு தெரிந்தாலும் பிற மொழி நபர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் விக்ரம் தற்போது தஞ்சாவூர் பெரிய கோவிலின் கட்டடக்கலை பற்றியும், பொன்னியின் செல்வனான இராஜராஜ சோழன் அதை எவ்வாறெல்லாம் கட்டினார் என்பது பற்றியும் கூறியது பல பிரபலங்களுக்கே ஆச்சரியமாக தான் இருந்தது.

இப்போது போன்று எவ்விதமான நவீன வசதிகளும் இல்லாத அந்த காலத்திலேயே அதிக எடையுள்ள கல்லை கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றதைப் பற்றியும், அப்போதைய கட்டிடக்கலை பற்றியும் அவர் கூறினார். மேலும் ராஜ ராஜ சோழன் ஏகப்பட்ட அணைகளை கட்டியதாகவும், மக்களுக்கு மருத்துவம் உட்பட பல சேவைகளையும் அவர் செய்துள்ளதாகவும் கூறினார்.

Also read:விக்ரம் பிரபுவை மிரளவைத்த பொன்னியின் செல்வன் கேரக்டர்.. சூடுபிடிக்கும் புரோமோஷன்

அது மட்டுமல்லாமல் வாணிபத்திற்காக கடல் வழியாக பல தீவுகளுக்கும் சென்றது தமிழர்கள் தான் என்று கூறி அவர் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். தஞ்சாவூர் பற்றியும், ராஜ ராஜ சோழன் பற்றியும் அவர் கூறிய இந்த தகவல்களை கேட்ட ஜெயம் ரவி விக்ரமை கட்டியணைத்து பாராட்டினார்.

இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். அவருக்கு அண்ணன் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு தெரியாத பல விஷயங்களையும் விக்ரம் கூறியிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.

Also read:யாருக்கு இப்படி ஒரு குடுப்பனை கிடைக்கும்.. பொன்னியின் செல்வன் படத்தில் இவர்தான் ப்ளே பாய்!

Trending News