சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

முதல் வெற்றியை ருசிப்பதற்கு நொந்து நூடுல்ஸ் ஆன விக்ரம்.. விடாப்பிடியாக இருந்து மெருகேற்றிய பாலா

Vikram First Success: விக்ரம் படம் என்றால் முக்கால்வாசி உடலை வருத்திக்கொண்டு, இமேஜை பார்க்காமல் நடித்து வெற்றி படங்களை கொடுக்கக்கூடியவர். அப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த காலத்தில் ரொம்பவே அடிபட்டதனால் அதனுடைய உண்மையான மகத்துவம் என்னவென்று ஒவ்வொரு படங்களிலும் இவருடைய நடிப்பை பார்த்தால் புரியும். அந்த அளவிற்கு டெடிகேஷன் ஆக நடிக்க கூடியவர். அப்படிப்பட்ட இவர் முதல் வெற்றியை பார்ப்பதற்கு ரொம்பவே நொந்து போயிருக்கிறார்.

அந்த வகையில் இவருக்கு மிகவும் கை கொடுத்து தூக்கி விட்ட படம் சேது. இப்படத்தில் தான் விக்ரம் ஒரு ஹீரோவுக்கான அங்கீகாரத்தை முழுமையாக பெற்றார் என்று சொல்லலாம். அதே மாதிரி இயக்குனர் பாலாவும் இந்த படத்தின் மூலம் தான் இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார். அந்த வகையில் இவர்கள் இருவருக்குமே சேது படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

ஆனால் இந்த படத்தை எடுத்து ரிலீஸ் செய்வதற்குள் இயக்குனர் பாலா படாத பாடு பட்டிருக்கிறார். அதாவது 1993 ஆம் ஆண்டு அகிலன் என்ற டைட்டில் வைத்து பூஜை போட்டிருக்கிறார். ஆனால் சில காரணங்களாக அந்த படம் அப்படியே டிராப் ஆகி இருக்கிறது. அடுத்து நான்கு வருடங்கள் கழித்து 1997 ஆம் ஆண்டு மறுபடியும் பூஜை போட்டு இருக்கிறார்.

Also read: மன நிம்மதி இல்லாமல் தவிக்கும் கௌதம் மேனன்.. கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கும் விக்ரம்

ஆனால் அன்றைக்கு சாயங்காலம் சினிமாவில் யூனியன் ஸ்ட்ரைக் ஆகிவிட்டது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு போக முடியாமல் அவஸ்தை பட்டு இருக்கிறார். அப்பொழுது பாரதிராஜா கிட்ட போய் எப்ப சார் இந்த ஸ்ட்ரைக் முடியும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு என்கிட்ட ஏன் கேக்குறீங்க என்று கோவமாக சொல்லி இருக்கிறார். உடனே அமீர் மற்றும் பாலா இந்த பதிலை கேட்டு கோபத்தில் ஸ்ட்ரைக் அறிவித்தது நீங்கதான.

அப்படி என்றால் உங்க கிட்ட தானே இதை கேட்க முடியும் என்று இவர்களும் கோபத்தில் கத்திருக்கிறார்கள். அதற்கு பாரதிராஜா இவர்களை கோபமாக கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக பேசி அனுப்பி இருக்கிறார். இந்த மாதிரி பல சம்பவங்களை கடந்து பின் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். ஆனாலும் படத்தை எடுத்த பின் எந்த விநியோகஸ்தர்களும் வாங்குவதற்கு முன் வரவில்லை.

அப்படி வந்தவர்களிடம் 100 தடவைக்கு மேலே இந்த படத்தை போட்டு காட்டி இருக்கிறார்கள். படத்தை பார்த்துவிட்டு எந்த பதிலும் சொல்லாமல் சிலர் போயிருக்கிறார்கள். இப்படி எல்லாம் பல கஷ்டங்களை அனுபவித்த பிறகே கடைசியாக இரண்டு வருடங்களுக்கு அப்புறம் 1999 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படி பல போராட்டங்களை தாண்டியதால் இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி தேசிய திரைப்பட விருதை வாங்கும் அளவிற்கு பாராட்டு கிடைத்தது.

Also read: இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 10 படங்கள்.. விஜய்க்கு டஃப் கொடுக்கும் விக்ரம்

- Advertisement -spot_img

Trending News