செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Modhalum kadhalum: மிரினாளியின் நடிப்பில் ஏமாந்த விக்ரம்.. வேதா வாழ்க்கையில் சூழ்ச்சி பண்ண போகும் சதிகாரி

Modhalum kadhalum Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மோதலும் காதலும் சீரியலில், விட்ட குறை தொட்ட குறை என்று சொல்வது போல மிரினாளியை கல்யாணம் பண்ண பாவத்திற்காக வேதாவுக்கு எதிராக விக்ரம் ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதாவது மிரினாளிக்கு பழைய ஞாபகம் இல்லாமல் புத்தி பேதலித்து இருப்பதாக டாக்டர், விக்ரமுக்கு போன் பண்ணி சொல்லி இருக்கிறார்.

விக்ரம் போய் பார்த்த நிலையில் மனசு கேட்காமல் தடுமாறுகிறார். மிரினாளியை அப்படியே விட முடியாமல் நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று விக்ரம் நினைக்கிறார். அதற்காக வேதாவிடம் இருந்து உண்மையை மறைத்து அடிக்கடி மிரினாளியை போய் பார்த்து வருகிறார்.

சூழ்ச்சி வலையில் சிக்கிய விக்ரம் வேதா

தற்போது இவருடைய நிலைமையை தன்விக்கு விக்ரம் தெரியப்படுத்துகிறார். ஆனால் தன்விக்கு இதில் விருப்பமே இல்லாததால் பல காரணங்களை சொல்லி எப்படியோ விக்ரம் சமாதானப்படுத்தி விட்டார். ஆனால் இதை நாம் ஏன் அம்மாவிடமிருந்து மறைக்க வேண்டும். அவர்களிடம் உண்மையை சொல்லலாம் என்று தன்வி சொல்கிறார்.

அதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் விக்ரம் அமைதியாக நிற்கிறார். இதற்கிடையில் சமீபத்தில் விக்ரமின் நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது என்று வேதா புரிந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து விக்ரமுக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்ள வேதா முயற்சி எடுக்கிறார்.

அந்த வகையில் இந்த அனைத்து உண்மையும் வேதாவுக்கு தெரிந்த நிலையில் மிரினாளியை பார்க்க விக்ரமை கூட்டிட்டு வேதா போகிறார். பிறகு நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று வேதா சொல்லிய நிலையில் மிரினாளியை வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்கள்.

ஆனால் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று நிற்கிறார்கள். பிறகு வேதா மற்றும் மிரினாளி ஒன்றாக வீட்டிற்குள் நுழைகிறார்கள். ஆனால் இனி தான் இந்த குடும்பத்திற்கு ஏழரை சனிபிடிக்கப் போகிறது என்பதற்கு ஏற்ப மிரினாளி ஆட்டம் இருக்கப் போகிறது.

ஏனென்றால் மிரினாளிக்கு எந்த பிரச்சினையுமே இல்லை. விக்ரமும் வேதாவும் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்று பிளான் பண்ணி அவர்கள் வாழ்க்கையில் குளறுபடி ஏற்படுத்துவதற்காக தான் சதி செய்யப் போகிறார். பாவம் இது தெரியாமல் விக்ரம் வேதா இவரிடம் மாட்டிக் கொண்டு முழிக்கப் போகிறார்கள்.

Trending News