திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

19 வருடங்களுக்கு முன்பு அவமானப்படுத்தப்பட்ட விக்ரம்.. தேடி வந்த உதவியால் கூனி குறுகி போன தயாரிப்பாளர்

Actor Vikram: விக்ரம் நடிப்பில் இப்போது தங்கலான் உருவாகி இருக்கிறது. வித்தியாசமான கெட்டப்பில் அவர் அசத்தி இருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் இப்போது படு ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் 19 வருடங்களுக்கு முன்பு இவர் அவமானப்படுத்தப்பட்ட ஒரு சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்திருந்த பிதாமகன் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதில் விக்ரமின் நடிப்பு வேற லெவலில் இருக்கும். அதற்காக இவர் தேசிய விருது கூட பெற்றிருந்தார். ஆனால் உண்மையில் இப்படத்தில் விக்ரம் நடிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் முடிவெடுத்திருக்கிறார்.

Also read: தங்கலான் போல உருமாறிய துருவ் விக்ரம்.. மாரி செல்வராஜால் ஏற்பட்ட மாற்றம், தீயாய் பரவும் புகைப்படம்

என்னவென்றால் இந்த படம் உருவாக இருந்த சமயத்தில் தயாரிப்பாளர் துரை மற்றும் இயக்குனர் பாலா இணைந்து விக்ரம் வேண்டாம் முரளியை நடிக்க வைக்கலாம் என்று பிளான் செய்திருக்கிறார்கள். அதற்கான முயற்சி கூட நடந்திருக்கிறது. பிறகு எப்படியோ மீண்டும் விக்ரம் கைக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தன்னை அவமானப்படுத்தியவர்கள் முன் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற வெறியில் விக்ரம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்தார். அதன் பலன் தான் அவருக்கு கிடைத்த தேசிய விருது. இந்தப் படத்திற்கு பிறகு விக்ரம் தயாரிப்பாளரை சந்திக்கவே இல்லையாம். சமீபத்தில் கூட அவர் உடல் நல பிரச்சனையில் இருக்கிறேன் என ரஜினியிடம் தான் உதவி கேட்டிருந்தார்.

Also read: நானும் பான் இந்தியா ஹீரோ தான் என விக்ரம் தொடங்கிய 62வது படம்.. வெற்றி இயக்குனருடன் கூட்டணி

சூப்பர் ஸ்டாரும் அவருக்கான உதவியை செய்திருந்தார். தற்போது துரை சர்க்கரை வியாதி முற்றி போய் ஒரு காலை எடுக்கும் நிலைமைக்கு ஆளாகி இருக்கிறார். மேலும் செயற்கை கால் பொருத்துவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விக்ரம் தாமாகவே முன்வந்து அவருக்கு உதவி செய்திருக்கிறார்.

அந்த வகையில் செயற்கை கால் பொருத்தும் நிறுவனத்திடம் விக்ரம் இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்து அடுத்த கட்ட வேலையை ஆரம்பிக்கும் படி கூறி இருக்கிறார். அதை தொடர்ந்து தயாரிப்பாளரின் செலவுக்காக ஒரு லட்சம் பணத்தையும் கையில் கொடுத்திருக்கிறார். இதை நிச்சயம் தயாரிப்பாளர் எதிர்பார்த்து இருக்க மாட்டார். அந்த வகையில் தன்னை அவமானப்படுத்தினாலும் தேடிப்போய் உதவி செய்து அவரை கூனி குறுக வைத்திருக்கிறார் விக்ரம்.

Also read: பேரை வாடகைக்கு வாங்கி நடித்த 5 ஹீரோக்கள்.. சீயானை ஓரம் கட்டி கூகுளில் இடம் பிடித்த கமலின் விக்ரம்

Trending News