தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் விக்ரம் போல் தோல்வி கொடுத்த நடிகர்கள் இவ்வளவு பெரிய ஹீரோ ஆவார்கள் என யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். தொடர்ச்சியாக விக்ரம் ஹீரோவாக நடித்த 7 படங்கள் தோல்வியை சந்தித்தன.
அதன் பிறகு சினிமாவின் மீது விக்ரமுக்குள்ள தீவிர வெறியை பார்த்து விட்டு பாலா தன்னுடைய சேது பட வாய்ப்பைக் கொடுத்தார். அதன்பிறகு விக்ரமுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
ஆனால் சமீபகாலமாக விக்ரம் ஒரு ஹிட் படம் கொடுக்க தடுமாறி கொண்டிருக்கிறார். அந்த ஏக்கத்தை விக்ரம் ஏழு கெட்டப்புகளில் நடித்திருக்கும் கோப்ரா படம் நிறைவேற்றும் என நம்பலாம்.
மேலும் இதுவரை அனைத்து ரசிகர்களும் விக்ரமின் மகன் மற்றும் மகள் புகைப்படங்களை பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் பெரும்பாலானோர் விக்ரமின் மனைவியை பார்த்திருக்க மாட்டார்கள்.
விக்ரம் மனைவியின் பெயர் சைலஜா பாலகிருஷ்ணன். துருவ் விக்ரம் மற்றும் விக்ரமின் மகள் அக்ஷிதா ஆகிய இருவருடனும் சைலஜா விளையாடும் புகைப்படம் ஒன்றை நெட்டிசன்கள் தேடி கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர்.