பிக் பாஸ் வீட்டில் சாக்கடையில் முங்கிய விக்ரமன்.. ஒரு மணி நேரத்தில் ட்ரெண்டான சம்பவம்

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்த நிலையில் எல்லாருடைய சுயரூபமும் வெளியில் வந்துள்ளது. ஆனால் சிலர் எப்போதுமே தன்னுடைய முகத்தை காட்டாமல் சாதுரியமாக விளையாண்ட வருகிறார்கள். இந்நிலையில் இந்த சீசனில் எல்லா போட்டியாளர்களை விட மிகவும் வித்யாசமான நபராக உள்ளவர் விக்ரமன்.

சின்னத்திரை தொடர்களின் மூலம் அறிமுகமான விக்ரமன் அதன் பின்பு தனது பாதையை மாற்றிக் கொண்டார். அரசியல் பத்திரிக்கையாளர் என தனது திறமையை வளர்த்துக் கொண்டார். கிடைத்த நேரத்தில் சமூகத்தின் மீது உள்ள அக்கறையான விஷயங்களை கூறி வருகிறார்.

Also Read :திமிராக மல்லு கட்டிய மன்சூர் அலிகான்.. பருத்தி மூட்ட குடோன்லயே இருக்கட்டும் என விரட்டியடித்த பிக் பாஸ்

இந்த சூழலில் பிக் பாஸ் வீட்டில் பிபி சேனல் டாஸ்க் நடந்து வருகிறது. இதில் எல்லோருமே தங்களுக்கு உண்டான திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு விக்ரமன் ஓவர் நைட்டில் ட்ரெண்டாகியுள்ளார்.

அதாவது இதில் துப்புரவு பணியாளராக விக்ரமன் நடித்துள்ளார். சாக்கடையில் முக்கி குப்பைகளை அகற்றும் போது விஷவாயுத்தாக்கி விக்ரமன் இறந்து விடுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வார எபிசோடில் கமல் இது பற்றி பேசுகிறார்.

Also Read :விக்ரமனை டார்கெட் செய்த பஜாரிகள்.. டிஆர்பிக்காக நடந்த சண்டை, ஆரிக்கு பின் பெருகும் ஆதரவு

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மிகவும் வேதனையான ஒரு விஷயம். இதற்காக ஒரு மெஷின் தயாரிக்க வேண்டும் என்பது போன்று கூறியிருந்தார். தற்போது விக்ரமன் துப்புரவு தொழிலாளர்களின் பிரதிபலிப்பாக இந்த மிகப்பெரிய பிரச்சனையை ரசிகர்களுக்கு முன்னெடுத்து வைத்துள்ளார்.

இதைப் புரிந்து கொண்டு மக்கள் அவர்களைப் பார்க்கும் விதம் மாறி அவர்கள் மீது மரியாதையை ஏற்படுத்தி உள்ளார் விக்ரமன். இவ்வாறு தொடர்ந்து விக்ரமின் செயல்பாடுகள் மக்களை கவர்ந்து வருவதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரை இவர் பயணிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Also Read :பிக்பாஸ் போய் பத்து பைசா பிரயோஜனம் இல்ல.. அது ஒரு பித்தலாட்டம் எனக் கூறி பப்ளிசிட்டி தேடும் நடிகர்