வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் டெடிகேஷன்.. நெகிழ்ந்து போன நிழல்கள் ரவி

நடிகர் விக்ரம் நடிப்புக்காக எதையும் செய்யக்கூடியவர். தன்னுடைய கடின உழைப்பால் தான் அவரால் இந்த உயரத்தை அடைய முடிந்துள்ளது. தற்போது விக்ரம் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். அதிலும் கோப்ரா படத்தில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும்படி 20 கெட்டப்பில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. மணிரத்தினத்தின் கனவு படமான இப்படத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இதில் ஆதித்ய கரிகாலன் என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம்.

மேலும் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, ரகுமான் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நிழல்கள் ரவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பகிர்ந்து கொண்டார்.

பொன்னியின் செல்வன் படம் சோழர்கள் காலத்து கதை என்பதால் தூய தமிழில் வசனங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதனால் இப்படத்தில் வசனம் பேசுவது கொஞ்சம் கடினமாக இருந்தது. அதுவும் லைவ்வில் வசனங்கள் பேச வேண்டும். அதில் ஐஸ்வர்யாராயும் தனது கொஞ்சு கொஞ்சு தமிழில் அழகாக பேசி இருந்தார்.

மேலும் திரிஷா தமிழ் சரளமாக பேசக்கூடியவர். அதேபோல் பொன்னியின் செல்வன் படத்திலும் திரிஷா அழகான தமிழில் பேசி இருந்தார். இவர்களைவிட விக்ரம் காலை 7:30 மணிக்கு குதிரையில் அமர்ந்து வசனம் பேச தொடங்கினால் மாலை 5 மணிக்குதான் இறங்குவார்.

அந்த அளவுக்கு பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் டெடிகேஷன் இருந்ததாக நிழல்கள் ரவி அந்த பேட்டியில் கூறியுள்ளார். சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக விக்ரம் மருத்துவமனையில் இருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Trending News