நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருபவர். 90 காலகட்டத்திலிருந்து தனது நடிப்பு திறமையாலும், தனது உழைப்பாலும் ஒவ்வொரு படங்களிலும் தன்னை நிரூபித்து வருபவர். விக்ரம் போல் ஒரு நடிகர் என்றுமே தமிழ் சினிமாவில் உருவாக முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு பேசப்பட்டு வருகிறது.
அந்த அளவிற்கு இவர் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்பவர். உதாரணமாக இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஐ திரைப்படத்தில், ஒரு கதாபாத்திரத்தில் பாடி பில்டராகவும், மற்றொரு கதாபாத்திரத்தில் முகம், உடல் சிதைந்த வேடம் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் இரண்டாவது கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரம் கிட்டத்தட்ட 25 கிலோ வரை தனது எடையை மிக குறுகிய காலத்தில் குறைத்தவர்.
Also Read: வீட்டிற்கு வெளிப்படையாய் செல்ல முடியாத விக்ரம் .. பா ரஞ்சித்தால் படாதப்பாடு
இப்படி ஒவ்வொரு படங்களுக்கும் தன் உடல் ,முகம், நடிப்பு என எல்லாவற்றிலும் வித்தியாசத்தை காட்டிவரும் விக்ரம், தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். சுதந்திரமாவதற்கு முன்பாக நடந்த சில உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாகி வருகிறது. பழங்குடியினர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விக்ரமின் வேடம் கம்பீரமாக உள்ளது.
இந்நிலையில் தங்கலான் படத்தில் விக்ரம் நடிப்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தங்கலான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் அமைந்துள்ள கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெற்று வரும் நிலையில், நடிகை மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
Also Read: பொன்னியின் செல்வன் 2 ரிலீசுக்கு வரும் பெரும் சிக்கல்.. படாதபாடு படும் ஜெயம் ரவி, விக்ரம்
இதனிடையே விக்ரம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மீண்டும் எதிர்காலத்தை நோக்கி என்ற கேப்ஷனுடன் நீச்சல் குளத்தில் கூலிங் கிளாஸுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிய நிலையில், ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

ஒருவேளை தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறாரா என்று கணிக்கப்படுகிறது. மேலும் தங்கலான் படப்பிடிப்பில் ஏதேனும் பிரச்சனை காரணமாக அவர் வேறொரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும் விக்ரமின் இந்த மாஸ் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு ரவுண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 5 டைட்டில்களை விட்டு கொடுக்காமல் அடம்பிடிக்கும் கமல், விக்ரம்.. கிடப்பில் போடப்பட்ட படங்கள்