ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குட்டி நந்தினிக்கு கிடைத்த பெரிய ஆஃபர்.. ஹீரோயினாக அறிமுகமாகும் விக்ரமின் காதலி

Actor Vikram: கடந்த சில மாதங்களாகவே விக்ரமின் தங்கலான் பட அப்டேட் எதுவும் வராததால் ரசிகர்கள் மிகுந்த அப்செட்டில் இருக்கிறார்கள். பா ரஞ்சித் இயக்கத்தில் வித்யாசமான கெட்டப்பில் தங்கலான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். கோலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் இப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக இயக்குனர் கூறியிருந்தார். இந்நிலையில் விக்ரம் நடிப்பில் அரக்கர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அவர் படத்தின் கதாநாயகிகள் அவருடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்றால் சற்று திணற தான் செய்வார்கள்.

Also Read : எதிர்பார்த்த படத்தில் இப்படி ஒரு கேவலமான விஷயம்.. கௌதம் வாசுதேவ் மேனன், விக்ரம் கண்டுக்காத அவல நிலை

ஆனால் குழந்தையாக இருக்கும்போதே விக்ரமுக்கு இணையாக நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் சாரா. ஏஎல் விஜய்யின் இயக்கத்தில் உருவான தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்திருந்தார் சாரா. மனவளர்ச்சி குன்றிய அப்பா மீது அதீத பாசம் வைத்திருக்கும் மகளாக நடித்து அசத்து இருப்பார்.

இதைத்தொடர்ந்து ஏ எல் விஜய்யின் மற்றொரு படமான சைவம் படத்திலும் சாரா நடித்திருந்தார். அதன்பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராயின் சிறு வயது கதாபாத்திரத்தில் சாரா நடித்திருந்தார்.

Also Read : லோகேஷுக்காக இறங்கி வந்த விக்ரம்.. எதிர்பார்ப்பை மிரள வைக்கும் சீயான் 62

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகள் என்றால் பொன்னியின் செல்வன் படத்தில் அவரது காதலியாக நடித்திருந்தார். ஆனாலும் விக்ரம் மற்றும் சாரா இடையே காட்சிகள் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறவில்லை. இந்நிலையில் கதாநாயகியாக சாரா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இருக்கிறார்.

அந்த படத்தையும் இயக்குனர் ஏ எல் விஜய் தான் இயக்க இருக்கிறாராம். குழந்தையாக இருக்கும்போதே சொல்கின்ற விஷயத்தை மிகவும் உன்னிப்பாக கேட்டு அதன்படி நடித்து விடுவாராம் சாரா. மேலும் 2025 ஆம் ஆண்டு சாராவை கதாநாயகியாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் கூறி இருக்கிறார்.

Also Read : சம்பவத்திற்கு தயாரான விக்ரம், பா ரஞ்சித்.. கமலுக்கு கொடுக்கப் போகும் டஃப்

Trending News