வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அவருக்கு வில்லனா நடிக்க முடியாது.. விக்ரமை ஒரே செக்கில் ஓகே சொல்ல வைத்த லைக்கா

விக்ரம் தனது கடின உழைப்பால் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்று இருந்தாலும் சமீபகாலமாக அவருடைய நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. கோப்ரா, மகான் என தொடர் தோல்வி படங்களை மட்டுமே கொடுத்து வந்தார். இதனால் அவரது கிரஃப் சரிவை சந்தித்தது.

இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்திருந்தார். இதன் மூலம் தான் விட்ட மார்க்கெட்டை ஓரளவு பிடித்து விட்டார். இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.

Also Read : விக்ரம் பட ரோலக்ஸ் வாய்ப்பை தவறவிட்ட நடிகர்.. ரஜினியின் அடுத்த பிரம்மாண்ட படத்தின் வில்லன்

இப்படம் விக்ரமின் கேரியரில் முக்கியமான படமாக அமையும் என பெரிதும் நம்பி உள்ளார். இப்போது சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க விக்ரம் மறுத்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்ததாக ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேலுடன் கூட்டணி போட இருக்கிறார்.

இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தில் தான் ரஜினிக்கு வில்லனாக விக்ரம் நடித்தால் நன்றாக இருக்கும் என ஞானவேல் ஆசைப்பட்டு உள்ளார். இதற்காக விக்ரம் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் ரஜினிக்கு வில்லனாக தன்னால் நடிக்க முடியாது என விக்ரம் திட்டவட்டமாக மறுத்து விட்டாராம்.

Also Read : வளர்த்து விட்டுவிட்டவரை அடியோடு மறந்த விக்ரம்.. பொன்னியின் செல்வனை வைத்து கேரியரை ஓட்டும் பரிதாபம்

இதனால் ஒரு நாள் முழுக்க விக்ரம் வீட்டில் ஞானவேல் காத்திருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லையாம். இதை தயாரிப்பு நிறுவனத்திடம் அவரே கூறியுள்ளார். மேலும் இந்த விஷயத்தை ஒரே ஒரு போன் கால் மூலமாக லைக்கா முடித்துள்ளது. அதாவது விக்ரமை தொலைபேசி வாயிலாக லைக்கா தொடர்பு கொண்டு உள்ளது.

அப்போது தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க 50 கோடி ஒரே செக்கில் தருவதாக கூறியுள்ளனர். அவர்கள் விடாப்பிடியாக கேட்டுக் கொண்டதால் வேறு வழி இன்றி விக்ரம் அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். மேலும் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக இருக்கிறது.

Also Read : எல்லாம் அவளை மறக்கத்தான் என சுற்றித் திரிந்த விக்ரம்.. ஆறுதலுக்காக மணிரத்னம் எடுத்துள்ள தரமான முடிவு

Trending News