சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அள்ள அள்ள குறையாத தங்கலான் வசூல்.. 13 நாட்களில் செய்த மொத்த கலெக்ஷன்

Vikram : பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது தங்கலான் படம். தன்னையே உருமாற்றிக் கொண்டு உசுரை கொடுத்து விக்ரம் நடித்திருந்தார். அதற்கான பாராட்டு மற்றும் வசூல் என தங்கலான் படத்திற்கு வரவேற்பு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி போன்றோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 13 நாட்கள் ஆன நிலையில் 100 கோடி வசூலை நெருங்க உள்ளது. அதன்படி நேற்று 13வது நாளில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி வசூலை ஈட்டியது.

இப்போதே திரையரங்குகளில் கொட்டுகாளி மற்றும் வாழை படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் தங்கலான் படமும் வசூல் வேட்டையாடி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை தங்கலான் படம் 63 கோடி வசூல் செய்திருக்கிறது.

தங்கலான் படம் 13 நாட்களில் செய்த கலெக்ஷன்

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 93 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. ஆகையால் இந்த வாரம் எப்படியும் 100 கோடி வசூலை தொட்டுவிடும் என படக்குழு எதிர்பார்க்கிறது. இந்த வருடம் தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நல்ல வசூலை பெற்றது.

அந்த வகையில் ராயன் படத்தை தொடர்ந்து தங்கலான் படத்திற்கு மக்கள் கூட்டம் தியேட்டரில் அதிகம் பார்க்கப்பட்டது. மேலும் இப்படம் விக்ரமின் கேரியரில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. இதன் மூலம் அவர் ஏற்றத்தை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தங்கலானுக்கு பிறகு பா ரஞ்சித்தின் திரை வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட போகிறது. அந்த வகையில் அடுத்ததாக சூர்யாவின் படத்தை பா ரஞ்சித் எடுக்க இருக்கிறார். இவ்வாறு தங்கலான் படகுழுவுக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்ட மழை தான்.

விக்ரமுக்கு அடித்த ஜாக்பாட்

Trending News