Vikram: இப்போது திரையரங்குகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. அதாவது பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவான தங்கலான் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 வெளியான நிலையில் படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படும் தங்கலானுக்கு ஆஸ்கர் விருதை கொடுக்கலாம் என்ற அளவுக்கு பிரபலங்களும் புகழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கிலும் தங்கலான் படம் வெளியான நிலையில் 2 நாட்களில் சக்சஸ் மீட் கொண்டாடப்பட்டது.
இதில் கலந்துகொண்டு பேசிய விக்ரம் தங்கலான் படத்தை பற்றிய சில அப்டேட்டுகள் கொடுத்திருந்தார். அதாவது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விரைவில் தங்கலான் படத்தின் பார்ட் 2 சூட்டிங் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார்.
அரண்மனை போல் உருவாகும் விக்ரமின் தங்கலான்
அதுமட்டுமல்லாமல் தேவைப்பட்டால் தங்கலான் படத்தின் மேலும் சில பாகங்களும் எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை படம் வெற்றி ஆன பிறகு அடுத்தடுத்த பாகங்கள் எடுத்து வந்தார்.
கடைசியாக அரண்மனை 4 படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது விக்ரமின் தங்கலான் படமும் இதே போன்று அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் என விக்ரம் சொன்ன செய்தி பலராலும் வரவேற்கப்பட்டு உள்ளது.
கோப்ரா போன்ற சில தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த விக்ரமுக்கு தங்கலான் ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக தனது உடலை வருத்திக் கொண்டு முழு உழைப்பையும் தங்கலான் படத்தில் போட்டிருந்தார். கண்டிப்பாக அதற்கு பலனளிக்கும் விதமாக ஒரு நல்ல விருது விக்ரமுக்கு கிடைக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.
பட்டையை கிளப்பும் தங்கலான்
- தங்கலானை மெருகேற்றி பார்க்கத் தூண்டிய 7 காரணங்கள்
- பிரகாசமாக மின்னிய தங்கலான் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்
- தங்கலானுக்கு உயிர் கொடுத்த விக்ரம்!