Thangalaan Review: விக்ரம், பா. ரஞ்சித் கூட்டணியில் இரண்டு வருட கடின உழைப்பின் பலனாக உருவான தங்கலான் இன்று திரைக்கு வந்துள்ளது. சுதந்திர தின ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகி இருக்கும் இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
கடந்த சில வாரங்களாகவே பட குழு பல இடங்களுக்கு சென்று படத்தை பிரமோஷன் செய்து வந்தனர். மேலும் டிரெய்லர், பாடல்கள் என அனைத்தும் பட்டையை கிளப்பிய நிலையில் தற்போது படத்தை பார்த்தவர்கள் ஆகா ஓகோ என புகழ்ந்து வருகின்றனர்.
அதிலும் விக்ரமின் நடிப்பும் தோற்றமும் சொல்ல வார்த்தைகளே கிடையாது. முதல் பாதி எப்படி சென்றது என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கிறது.
தங்கலான் விமர்சனம்
கோலார் தங்க சுரங்கத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகளை தான் ரஞ்சித் தங்கலான் மூலம் சொல்லி இருக்கிறார். அதன்படி இதுதான் உண்மையான கேஜிஎஃப் என ரசிகர்கள் புகழாரம் கொடுத்து வருகின்றனர்.
அதேபோல் விக்ரம், மாளவிகா மோகனின் இருவருக்கும் இடையே வரும் அந்த காட்சி புல்லரிக்க வைத்திருக்கிறது. பின்னணி இசை, மேக்கிங், நடிகர்கள் என ஒவ்வொன்றும் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகளை கொடுத்து வருகின்றனர்.
தற்போது அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடுத்தடுத்த காட்சிகளிலும் இதே போல் ஆரவாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தங்கலான் சில கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஒட்டுமொத்தத்தில் மின்னி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
சுதந்திர தின ஸ்பெஷலாக வெளிவந்த தங்கலான்
- இதுவரை தங்கலான் படத்தில் மறைக்கப்பட்ட விஷயம்
- ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த தங்கலான்
- கடனில் சிக்கி தவிக்கும் தங்கலான், கங்குவா ரிலீஸ்