பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கப்பட்டு 10 நாட்கள் நடந்து முடிந்தது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த உடனேயே தங்கலான் படத்தின் வியாபாரமும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்க முன்வந்தனர். கடைசியில் நெட் பிலிக்ஸ் நிறுவனம், தங்கலான் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே சுமார் 35 கோடி கொடுத்து உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
Also Read: காட்டுமிராண்டியாக ஆக்ரோஷம் காட்டும் விக்ரம்.. பா ரஞ்சித் கூட்டணியில் வித்தியாசமான டைட்டில் வெளியீடு
இந்தப் படம் சுதந்திரத்திற்கு முந்தைய 18ம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் அடிமைகளாக இருந்த தமிழர்களை மையப்படுத்தி உருவாகி வருகிறது. வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் இந்த படத்தில் மிரள விட்டிருக்கிறார்.
படம் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பார்வதியும் நடிக்கிறார். இவர்களுடன் பசுபதியும் உடன் நடித்துள்ளார்.
எனவே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் தங்கலான் படத்தின் ஆடியோ ரைட்ஸ் உரிமையை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் ரூபாய் 5 கோடி கொடுத்து வாங்கி விட்டது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
எனவே விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இவருடைய தங்கலான் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடிவடைந்து எப்போது ரிலீசுக்கு வரும் என்றும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.