வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

புது பஞ்சாயத்தில் மாட்டிக் கொண்ட வீரதீரசூரன்.. கைவரிசை காட்டிய ஆறுச்சாமியால் மாட்டிக்கொண்ட விக்ரம்

வீரதீரசூரன் படம் 2025 ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே டிரைலரில் கெத்து காட்டிய விக்ரமால் படம் பெரிய எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. ஆனால் இப்பொழுது இந்தப் படத்திற்கு பூதாகரமாய் ஒரு பிரச்சனை வந்துள்ளது.

எப்பொழுதுமே பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும் நேரத்தில் பழைய பஞ்சாயத்தை தோண்டி, இதுதான் சமயம் என அந்த படத்தின் ரிலீசுக்கு செக் வைப்பார்கள். இப்பொழுதும் அதேபோல் வீர தீரன் சூரன் படத்தின் ரிலீஸ் நேரத்தில் பிரச்சனையை கிளப்பி வருகின்றனர்.

விக்ரம் நடித்து 2018ஆம் ஆண்டு வெளிவந்த படம் சாமி ஸ்கொயர். முதல் பாகத்தை போல் இந்த படம் அமையவில்லை இது தயாரிப்பாளரிலிருந்து விநியோகஸ்தர் வரை அனைவருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதுவரை இந்த பிரச்சனை தலை தூக்கவில்லை.

சாமி ஸ்கொயர் படத்தை அப்பொழுது திருச்சி மற்றும் திருநெல்வேலி பகுதியில் விநியோகம் செய்தவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.இதனால் அவர்கள் 25 லட்சம் ரூபாய் அப்போதே நஷ்ட ஈடு கேட்டுள்ளனர். ஆனால் அப்பொழுது 19 லட்ச ரூபாய் மட்டும் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

இதனால் வீரதீர சூரன் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் மீதமுள்ள ஆறு லட்சத்தை வாங்கினால் தான் உண்டு என இப்பொழுது அந்த பழைய பஞ்சாயத்தை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஆறு லட்சம் மட்டும் என்றால், இந்த பஞ்சாயத்து முடிந்து விடும் ஆனால் அதற்கு வட்டி போட்டு பெரிய தொகையை கேட்டால் பிரச்சனைதான்.

Trending News