புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய்யால் நிறைய நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டேன்.. நெப்போட்டிசம் இப்படி கூட வேல செய்யுமா?

Thalapathy Vijay: நடிகர் விக்ராந்த் சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி இப்படி எல்லாம் கூட நடக்குமா என யோசிக்க வைத்திருக்கிறது.

கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விக்ராந்த். படம் ரிலீஸ் சமயத்திலேயே இவர் நடிகர் விஜய் உடைய உறவினர் என பரவலாக பேசப்பட்டது.

அதன் பின்னர் விஜயின் தாய் சோபா சந்திரசேகரனின் சகோதரி மகன் என தெரிய வந்தது. விக்ராந்த் அசப்பில் கொஞ்சம் பார்க்க விஜய் மாதிரி தான் இருப்பார்.

நெப்போட்டிசம் இப்படி கூட வேல செய்யுமா?

விக்ராந்திற்கு கோரிப்பாளையம் மற்றும் பாண்டியநாடு போன்ற படங்கள் பேசும் அளவுக்கு அமைந்தது. நல்ல திறமையான நடிகராக இருந்தும் விக்ராந்த் தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதற்கு காரணம் நடிகர் விஜய் தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஒரு பெரிய ஸ்டாரின் உறவினர் என்றால் வாய்ப்புகள் குவியும் என்றுதான் கேள்விப்பட்டிருப்போம்.

அப்படித்தான் விக்ராந்துக்கு பட வாய்ப்புகள் வரிசையாக வந்திருக்கின்றன. ஆனால் எல்லாமே நிபந்தனையுடன் வந்திருக்கிறது.

விஜய்யை கேமியோ ரோல் பண்ண சொல்லுங்க, படத்தில் ஒரு பாட்டு பாட சொல்லுங்க, படத்தின் விளம்பரத்தில் வர சொல்லுங்க என அவரை குறி வைத்தே வந்திருக்கிறது.

இதனாலேயே விக்ராந்த் அந்த பட வாய்ப்புகள் எதையுமே பயன்படுத்திக் கொள்ளவில்லை. அது மட்டும் இல்லாமல் இது பற்றி ஒரு முறை கூட விக்ராந்த் விஜய் இடம் பேசியது கூட கிடையாதாம்.

- Advertisement -

Trending News